ஸ்டெயின்ஸ் கொலை| ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனு..ஒடிசா அரசுக்கு நோட்டீஸ்

ஒடிசாவில் மதப் பிரசாரகரை எரித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் குற்றவாளியை முன்கூட்டியே விடுதலை செய்யும் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒடிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்எக்ஸ் தளம்
Published on

ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தில் வசித்துவந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் பிரசாரகர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்களான பிலிப் மற்றும் திமோதி ஆகியோர் தூங்கிக் கொண்டிருக்கையில் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இச்சம்பவம் 1999-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி நிகழ்ந்தது.

இதுதொடர்பாக பஜ்ரங் தளம் உறுப்பினர் ரவீந்திர பால் என்ற தாரா சிங் உட்பட 13 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதற்கென்று அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று 2003-ஆம் ஆண்டு தாரா சிங்குக்கு தூக்குத் தண்டனையும் மற்ற12 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாரா சிங் தரப்பில் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, 2005-ஆம் ஆண்டு தாரா சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர்களில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 2011-ஆம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது.

இந்த நிலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தாரா சிங், தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “நான் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறேன். செய்த குற்றத்தை ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளேன். அதற்காக வருந்துகிறேன். இதையடுத்து, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்” என அதில் கோரியுள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துக்காட்டிய தலைமை நீதிபதி!

உச்ச நீதிமன்றம்
பில்கிஸ் பானு வழக்கு|ஜாமீன் கோரிய 2 பேரின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

இதுகுறித்த விசாரணையின்போது அவரது வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயினும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி அமர்வு, ”இதுதொடர்பாக ஒடிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி 6 வார கால அவகாசத்தில் பதில் அளிக்க வேண்டும்” என கடந்த ஜூலை 9ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே தாரா சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவுக்காக ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், “தற்போது 61 வயதாகும் சிங், ஒருபோதும் பரோலில் விடுவிக்கப்படவில்லை. அவரது தாயார் இறந்தபோதும், அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியவில்லை. ஏப்ரல் 19, 2022 தேதியின்படி, ஏற்கெனவே தகுதியான காலத்தைவிட 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டார். 24 ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான சிறைவாசத்தை அனுபவித்துள்ளார். மேலும் அவருக்கு, எந்தவொரு பாதிக்கப்பட்டவர் மீதும் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆகையால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்” என வாதம் வைத்தார்.

ஏற்கெனவே இதேபோன்ற மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு ஒடிசா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒரே ஓவரில் 39 ரன்கள்! 17 ஆண்டுகால யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு.. ருத்ரதாண்டவம் ஆடிய சமோயா அணி வீரர்!

உச்ச நீதிமன்றம்
கன்வார் யாத்திரை| கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுத தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com