
இன்றைய தலைமுறையினர் மருத்துவரிடம் செல்வதற்கு முன் தங்களுக்கு வந்திருக்கும் நோய், அதன் வீரியம், அதை குணப்படுத்தும் மருந்து என எல்லாவற்றையும் இணையத்தில் தெரிந்துக்கொண்டுதான் மருத்துவரை அணுகுகின்றனர்.
இது ஆரோக்கியமான போக்கா, இல்லை அச்சுறுத்தும் விஷயமா என்பது பற்றி சரும நோய் மருத்துவர் ஸ்வேதா ராகுல் நம்மிடையே பகிர்ந்துகொண்டவை, இங்கே:
“சில சமயம் நல்லா இருக்கும். ஏன்னா அவங்களே கொஞ்சம் விழிப்புணர்வோட வருவாங்க. ஆனா பல சமயம், ‘இந்த மருந்தை நீங்க பரிந்துரைக்கவில்லையா’ என்று எங்களிடமே கேட்பாங்க. அது எரிச்சலை உண்டு பண்ணும்.
எல்லா வயதினரும் கூகுள் பார்த்து தெரிந்துக்கொள்வது நல்லது தான். ஆனாலும், அது பார்ப்போருக்கு மருந்துகளை பற்றியும் மருத்துவத்தை பற்றியும் ஒரு எல்லையை வழி வகுக்கிறது. அந்த எல்லைக்குள் தான் நாங்களே (மருத்துவர்கள்) வருகிறோம். கூகுளில் பார்ப்பது கேட்பது எல்லாமே உண்மை இல்லை. அது ஒரு வரையறைக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கூகுளில் நோயின் வீரியத்தையும் அதற்கான குணப்படுத்தும் மருந்தையும் ஒரு யூடியூபர் சொல்லி வருகிறார். இதையெல்லாம் பார்க்கவே, அதிர்ச்சியாக இருக்கிறது. எப்படி இவர்களுக்கு இந்த மருந்தை பற்றி எல்லாம் தெரிகிறது என்று விசாரித்து பார்த்ததில், அவரின் உறவினர் மருந்து கம்பெனியின் உரிமையாளார் என்று தெரிய வந்தது. மக்கள் மனதில் ஒரு வித பயத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக மருத்தை வாங்க வைக்கும் யுக்தி இது. இதை செய்யக்கூடாது” என்றார் அழுத்தமாக.
ஆகவே, மக்கள் யாரும் இனி கூகுள்லயோ யூ-ட்யூப்லயோ மருந்து தேடாதீங்க. மருத்துவ ஆலோசனை அவசியம்!