ஆப்பிள் சாப்பிடுவது நல்லது... ஆனால்,வயிறே ஆப்பிள் வடிவில் இருந்தால்?
ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால், மனிதர்களின் வயிறு ஆப்பிள் வடிவத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
வயிறு ஆப்பிள் வடிவத்தில் இருக்கிறது என்றால் உடல் எடையின் பெரும்பகுதி வயிற்றுப் பகுதியில் குவிந்திருக்கிறது என்று அர்த்தம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இதனால் உடலின் பிற பகுதிகளைவிட வயிற்றுப் பகுதி பெரியதாகத் தெரியும். இது உள்ளுறுப்புகளில் கொழுப்பு மிக அதிகமாகத் தேங்கியிருப்பதன் விளைவாக்க இருக்கலாம்.
மோசமான உணவுப் பழக்கம், ஹார்மோன் சமநிலையின்மை, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை ஆகியவற்றால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால் இரண்டாம் வகை நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிர உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன அழுத்தத்தை முறையாகக் கையாள்வது போன்ற நடவடிக்கைகளால் ஆப்பிள் வயிறு பிரச்சினையிலிருந்து விடுபட முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.