
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1164 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 1,170 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 1412 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக 28-ஆம் நாளாக நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. 13,790 பேர் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் மொத்தம் 26,91,797 பேர் தொற்றால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று தொற்றால் பாதிக்கப்பட்ட 1164 பேரில் 653 ஆண்கள் மற்றும் 511 பெண்கள் அடங்குவர். தலைநகர் சென்னையில் 152 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 137 பேர், செங்கல்பட்டில் 98 பேர், கிருஷ்ணகிரியில் 19 பேர், சேலத்தில் 59 பேர், திருப்பூரில் 73 பேர், ஈரோட்டில் 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகபட்சமாக 1.5% நபர்களுக்கு கோவிட் உறுதியாகியுள்ளது.