
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்காவும் முக்கியமான ஒன்று. அமெரிக்காவில் ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்பை, யாராலும் மறக்க முடியாது. அவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா, தற்போது பெருமளவு நிலைமையை சமாளித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், அந்நாட்டின் தடுப்பூசி விநியோகம்.
அமெரிக்காவில் ஏப்ரல் 2021 இறுதி நிலவரப்படி, 10 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கள், நாட்டில் ஏறத்தாழ 40 சதவிகித பெரியவர்களை குறிக்கிறது. 55 சதவிகித பெரியவர்கள், தங்களின் முதல் நிலை தடுப்பூசியை பெற்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது நிலை தடுப்பூசி போடாதவர்களையும், இன்னமும் தடுப்பூசி போடாதவர்களையும் மீதமுள்ளவர்களையும் தேடிக் கண்டறிந்து, தடுப்பூசி போடும் பணியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
மார்ச் மாத இறுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்கையில், ஒருமாதத்துக்குள், இரண்டு மடங்கு பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக 30 கோடி தடுப்பூசி வெள்ளை மாளிகை மூலம் புதிதாக வாங்கப்பட்டிருக்கிறது. விரைவில் தன் மக்கள் அனைவரையும் கொரோனாவுக்கு எதிராக மாற்றும் முயற்சியில், அமெரிக்கா மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது.
தடுப்பூசி பற்றிய நிறைய தவறான தகவல்கள், இணையத்தில் பரவுவதாகவும், அவற்றை இணையத்திலிருந்து அகற்றி, மக்கள் மத்தியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி வருகிறது அமெரிக்க அரசு.
தடுப்பூசியே கொரோனாவை வெல்ல உதவும் பேராயுதம்!