”இடைவேளையின்போது திரையரங்குகள் அதிரப் போகிறது” - மாமன்னனை புகழ்ந்த தனுஷ்; உதயநிதி கொடுத்த ரிப்ளை!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘மாமன்னன்’ படம் நாளை வெளியாகவுள்ளது.
udhayanidhi stalin dhanush
udhayanidhi stalin dhanushTwitter

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ உள்ளிட்டப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் நாளை வெளியாகவுள்ளது.

udhayanidhi stalin dhanush
'திரைப்படம் மக்கள் பார்ப்பதற்காகவே’- மாமன்னன் படத்திற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

இந்நிலையில் ‘மாமன்னன்’ குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படம் ஒரு உணர்ச்சிப்பூர்வமானப் படம். மாரி உனக்கு ஒரு பெரிய ஹக் (Hug). வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மிகவும் உறுதியான நடிப்பை வழங்கியுள்ளனர். ஃபஹத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் மிகச் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். இடைவேளையின்போது திரையரங்குகள் அதிரப் போகிறது. இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அழகான இசையை தந்துள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்தப் பதிவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இதயைத்தைத் தொடும் இந்த வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்ததற்கு மிக்க நன்றி, எனது அன்பான தனுஷ் சார்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேபோல் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “அனைத்துக்கும் நன்றி தனுஷ்... உங்களின் ஆதரவு இல்லாமல் ‘மாமன்னன்’ படம் உருவாகியிருக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com