சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வுக்கு சிக்கல் 

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வுக்கு சிக்கல் 
சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வுக்கு சிக்கல் 

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ பட தலைப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ பட தலைப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது. 2017 ஆம் ஆண்டிலேயே ‘ஹீரோ’ பட தலைப்பை பதிவு செய்திருப்பதாக ட்ரைபல் ஆர்ட்ஸ் பட நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விஜய் தேவரகொண்டா, மாளவிகாமோகனன் நடிப்பில் ஹீரோ படத்தை 5 மொழிகளில் எடுத்து வருகிறோம் எனவும் தயாரிப்பாளர் சங்கம் 2019 ஏப்ரலில் உத்தரவிட்டும் ‘ஹீரோ’ பட தலைப்பை சிவகார்த்திகேயன் படக்குழு பயன்படுத்துகிறது எனவும் ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com