
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக மாளவிகா மோகனனும் நடிக்கிறார்.
காலா மற்றும் ’2.0’ படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினிக்கு மற்றொரு ஜோடியாக நடிகை திரிஷாவும் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Read Also -> கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி- விஜய் சேதுபதி
இதில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல் ஷெட்யூல் டார்ஜிலிங்கில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் மலையாள நடிகை மாளவிகா மோகனனும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
(நவாஸூதின் சித்திக்)
Also Read -> அப்பாவுக்காக களத்தில் குதித்த ராஜமவுலி மகன்!
மாளவிகா, ’பட்டம் போலே’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர். பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய ’பியாண்ட் த கிளவுட்ஸ்’ படத்தில் நடித்ததற்காக பாரட்டுகளையும் பெற்றிருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படம் மூலம் தமிழில் அவர் அறிமுகமாகிறார். ரஜினிக்கும் அவருக்குமான பாடல் காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்பட இருக்கின்றன.
அதோடு இந்தி நடிகர் நவாஸூதின் சித்திக்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார். என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.