‘கோமாளி’ பட டிரெய்லரில் ரஜினி குறித்த காட்சி... ஜெயம் ரவி விளக்கம்..!

‘கோமாளி’ பட டிரெய்லரில் ரஜினி குறித்த காட்சி... ஜெயம் ரவி விளக்கம்..!
‘கோமாளி’ பட டிரெய்லரில் ரஜினி குறித்த காட்சி... ஜெயம் ரவி விளக்கம்..!

கோமாளி பட டிரெய்லரில் ரஜினி குறித்த காட்சி நல்ல நோக்கத்திற்காகவே வைக்கப்பட்டது என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள காட்சியில், ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருப்பார். பின்னர் ஜெயம் ரவி எழுந்து பார்க்கும்போது, இது எந்த வருடம் எனக் கேட்பார். அதற்கு யோகி பாபு இது 2016-ஆம் ஆண்டு என்பார். அந்த நேரத்தில், டிவியில் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பார். அதனைப் பார்க்கும் ஜெயம் ரவி இது 1996 தான் 2016 அல்ல என்பார். ரஜினியும் அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சும் நீண்ட காலமாகவே நிலவி வரும் நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் இந்தக் காட்சி அமைந்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் கோமாளி பட டிரெய்லரில் ரஜினி குறித்த காட்சி நல்ல நோக்கத்திற்காகவே வைக்கப்பட்டது என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயம் ரவி, “ ‘கோமாளி’ டிரெய்லரில் ரஜினி சார் குறித்த காட்சிகள் துரதிருஷ்டவசமாக அவர் ரசிகர்களின் மனதை காயப்படுத்தியுள்ளது. அந்த காட்சிகள் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே வைக்கப்பட்டது. நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன்தான். உங்களைப்போல அவரின் அரசியல் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

அவரின் படங்களை பார்த்து வளர்ந்தர்கள் நாம். அவரையோ அவரது ரசிகர்களையோ மரியாதைக் குறைவாக நடத்தும் விதமாகவோ, எந்தவித உள்நோக்கத்துடனோ அந்த காட்சிகள் வைக்கப்படவில்லை. உண்மையில் ‘கோமாளி’ படத்தை அவர் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டினார். எந்தவித உள்நோக்கம் இன்றி வைக்கப்பட்ட அந்த காட்சிக்கு ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை கருத்துகள் வந்துள்ளன. எனவே அந்தக் காட்சியை நீக்க முடிவு செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com