பிக்பாஸ் 7: பிரிகிறதா மாயா டீம்? வழக்கில் வெற்றி பெற்றும் ஏன் விஷ்ணு சிறைக்கு சென்றார்?

”கூல் சுரேஷுக்கு பூர்ணிமா, மாயாவின் திட்டத்தைப்பற்றி புரியவைக்கவேண்டும், அவங்க கூல் சுரேஷ் மேட்டரை ஒரு கருவேப்பிலை கொத்தாகதான் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதைத் தெரியவைக்க வேண்டும்” - அர்ச்சனா
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸில் 39ம் நாள் காலையில் :

அர்ச்சனா விசித்திராவிடம், ”கூல் சுரேஷுக்கு பூர்ணிமா, மாயாவின் திட்டத்தைப்பற்றி புரியவைக்கவேண்டும், அவங்க கூல் சுரேஷ் மேட்டரை ஒரு கருவேப்பிலை கொத்தாகதான் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதைத் தெரியவைக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

இதெல்லாம் கூல் சுரேஷூக்கு தெரியாதா என்ன? இத்தனை பிரச்சனைகளையும் பார்த்துக்கொண்டு அவர் வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் அங்கிருப்பவர்கள் யாரையும் மதிக்கவில்லை. அவர் தான் வந்தது விளையாட என்பதில் தெளிவாக இருக்கிறார் என்றே தோன்றுகிறது.

NGMPC22 - 147

நிக்சனின் தலைகுனிவு:

வினுஷா வைப்பற்றி நிக்சன் பேசியது அவருக்கே அசிங்கமாகப்போய் இருக்கவேண்டும். அதனால்தான் தானாக வாலண்ட்ரியாக ஒவ்வொருவரிடத்திலும் சென்று வலிய பேசுகிறார். அர்ச்சனா கூட நிக்சனிடம், “நிக்சன் நீ ஆரம்பத்தில் சரியாதான் விளையாடிட்டு இருந்த... இப்போ நீ அடுத்தவர்கள் சொல்வதைக்கேட்டு விளையாடுவது போல் இருக்கிறது. இது நல்லதல்ல... நீ நீயா இரு,” என்று அறிவுரை எல்லாம் கூறினார்.

நிக்சனின் இந்த மனமாற்றம் மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் பிடிக்கவில்லை. ”நம்ம டீம்ல இருப்பவங்க ஒவ்வொருத்தரா விசித்திரா டீமிற்கு போறாங்க... அதனால இந்த வாரம் நமக்கு எதிரா கமல் சாரிடம் ஏதாவது போட்டு கொடுத்துடுவாங்களோ? “ என்று புலம்பலுடன் பயம் இருவருக்குள்ளும் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

கோர்ட்டுக்கு வந்த வழக்குகள்:

அடுத்தது ஒரு கோர்ட் கேஸ் டாஸ்க் வந்தது. இதில் விஷ்ணு ஒரு கேஸை தந்தார். பூர்ணிமாவைப்பற்றி பிரதீப் ஒரு அடல்ட் கண்டண்ட் ஒன்றை சொன்னார். அவர் சொல்லும் சமயம் அருகில் மாயாவும் இருந்தார். ஆனால் பிரதீப் சொன்ன அடல்ட் கண்டண்டை கண்டித்து மாயா எதுவும் பேசவில்லை. சொல்லப்போனால் அதை ரசித்தபடி நின்றிருந்தார், என்று பூர்ணிமா விஷ்ணுவிடம் வருத்தப்பட்டதாக விஷ்ணு கேஸ் ஒன்றை ஃபைல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ரவீனா விஷ்ணு வெற்றிப்பெற்றதாக அறிவித்தார். இதில் விஷ்ணு கேஸ் ஃபைல் பண்ணியதற்கு முக்கிய காரணம் பூர்ணிமா, மாயா இருவரின் முகத்தைரையை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இதனால் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்ட வேண்டும் என்பதாகும். ஆனாலும் மாயாவும், பூர்ணிமாவும் ஒற்றுமையாக தான் இருந்தார்கள்.

பிக்பாஸ் 7
BIGGBOSS DAY 38| “அவ வேலைக்காரி” “பசங்கல்லாம் வேஸ்ட்”- எல்லா முகத்திரைகளையும் கிழித்த பிளாஸ்மா டிவி!

அடுத்ததாக பூர்ணிமா விசித்திரா மேல் ஒரு கேஸை கொடுத்தார்.

இதில் விசித்திரா சாப்பாடு மேட்டரில் சமையல் தெரியாத அர்ச்சனாவை மளிகை சாமான் டாஸ்கில் அனுப்பி பிக்பாஸ் வீட்டினரை பழிவாங்கியதாக கேஸ் ஒன்றை கொடுத்தார். ”இது அசிங்கமான, கேவலமான, அக்லியான, ரிவெஞ்ச் எடுக்குமொரு வேலைப்பாடு” என்று பூர்ணிமா கூறியதை கேட்ட விசித்திரா “ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் செல்லவேண்டும்; அப்படி இருக்கையில் நாங்கள் அனைவரும் ஓட்டு போட்டு தான் அர்ச்சனாவை அனுப்பினோம். இதற்கு அவருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. யார், யாரை அனுப்பவேண்டும் என்பதை கேப்டன் முடிவு செய்து சொல்லியிருக்கவேண்டும். அதே போல் என்னென்ன பொருட்கள் எடுக்கவேண்டும் என்பதை தீர்மானித்து சொல்லி இருக்கவேண்டும்” பாயிண்டாக விசித்திரா கூறியதை கேட்ட ஜட்ஜ் நிக்சன், சாதகமான தீர்ப்பை விசித்திராவிற்கு வழங்கினார்.

விஜய் டீவி

ஏற்கனவே விஷ்ணு கேஸில் மனமுடைந்திருந்த பூர்ணிமா விசித்திரா கேஸிலும் தோல்வியை தழுவியதும், நிக்சனிடம், “உன் தீர்ப்பு தப்பு,,, நீ அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிற... “ என்று அவரிடம் காச் மூச் என்று கத்த ஆரம்பித்தார். இதை பார்த்த விசித்திராவுக்கும், அர்சனாவுக்கும் ஏக கொண்டாட்டம். எப்படியாவது பூர்ணிமா மாயா கேங்கை உடைத்து அவர்களை தனித்தனியாக்கவேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது அல்வா சாப்பிட்ட ஒரு உணர்வை தந்திருக்கவேண்டும்.

விஜய் டீவி

மளிகை டாஸ்க்

அடுத்ததாக பிக்பாஸ் இரு வீட்டாருக்கும் டாஸ்க் ஒன்றை தந்தார். அதன்படி மளிகை சாமான்கள் வாங்கிய மயா, அர்ச்சனா இருவருக்கும் பில்லில் இருக்கும் மளிகை சாமான்கள் பற்றிய கேள்வி இருக்கும் இதற்கு சரியான பதில் சொல்லவில்லை என்றால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே ஒருவர் சிறைக்கு செல்லவேண்டும் என்றார். வழக்கம்போல் இவர்கள் சொதப்ப... பிக்பாஸ் வீட்டிலிருந்து அனைவரும் சேர்ந்து விஷ்ணுவை சிறைக்கு அனுப்பினர். விஷ்ணுவும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இதைக்கண்டு காண்டான கூல் சுரேஷ், மாயா அன் கோவை பார்த்து, ”நீங்க மளிகை சாமான் பில்லை ஒளித்து வைத்ததால தான் பிக்பாஸ் இந்த டாஸ்கை கொடுத்தார். நீங்க முன்னாடியே மளிகை சாமான் பில்லை எங்களுக்கு காட்டியிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது விஷ்ணுவும் சிறைக்கு சென்றிருக்கமாட்டார். எல்லாம் உங்களால தான்” என்று கத்திக்கொண்டிருந்தார். இனி என்ன நடக்க இருக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com