வெள்ளியை அதிகம் வாங்கும் சவுதி அரேபியா.. என்ன காரணம் தெரியுமா?

Vaijayanthi S

உலக நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவித்து வரும் நிலையில் சவுதி அரேபியாவின் மைய வங்கி மட்டும் வெள்ளியை அதிகமாக வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபிய வங்கியின் இந்த வியூகம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என நிதித்துறை நிபுணரான கீர்த்தன் ஏ ஷா (KIRTAN A SHAW) தனது லிங்க்டு இன் தள பதிவில் கூறியுள்ளார்.

உலகளவில் மின்னணு சாதனங்கள் பயன்பாடு மிக அதிகளவில் உயர்ந்து வரும் நிலையில் அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்றான வெள்ளிக்கு தேவை அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் வெள்ளியின் விலை உலகளவில் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையேற்ற வேகத்தை விட வெள்ளியின் விலையேற்ற வேகம் அதிகமாக உள்ளது.

தங்கத்தில் செய்வதை விட வெள்ளியில் இரட்டிப்பு முதலீடு செய்யலாம் என ஒரு தரப்பு முதலீட்டு நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வெள்ளி சிறந்த முதலீட்டு பொருள் என அறிவுறுத்தப்படும் நிலையில் சவுதி மைய வங்கி அதை அதிகம் வாங்குவது கவனம் பெறுகிறது.