“வெற்றி என்பது நம் நிழல்போல..” அப்துல் கலாம் பொன்மொழிகள்! #VisualStory

Prakash J

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று (ஜூலை 27) அனுசரிக்கப்படுகிறது. அவர் உதிர்த்துவிட்டுச் சென்ற வரிகள் சிலவற்றை, இத்தினத்தில் இங்கு பார்ப்போம்.

முடியும் வரை முயற்சி செய். உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்த செயல் முடியும்வரை!

நல்ல எண்ணங்கள் வளர வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும்.

கடமைகளை வெற்றி, தோல்வி பாராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் புதிய பாதை நமக்காக திறந்தே இருக்கும்.

உறங்கும்போது உருவாவது அல்ல கனவு; உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

வெற்றி என்பது நம் நிழல்போல... வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது அது நம் பின்னால் வரும்.

ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம்; ஆனால், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்குச் சமம்.

ஒருவரைத் தோற்கடிப்பது மிகவும் எளிதானது; ஆனால், ஒருவரை வெல்வது மிகவும் கடினமானது.

நீங்கள் புகழுடன் பிறந்தால், அது ஒரு எதிர்பாரா நிகழ்வு. ஆனால் நீங்கள் புகழுடன் இறந்தால், அது ஒரு சாதனை.

எந்தவொரு பிரச்னைக்கும், நிச்சயமாக போர் ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல.

மனிதனுக்குக் கஷ்டங்கள் தேவையானது; ஏனெனில், வெற்றியை அனுபவிப்பதற்கு அவை அவசியமானது.