'Hospitalல் குழந்தை மாறியது' முதல் 'Groundல் முடி வெட்டியது' வரை! கவாஸ்கர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Rishan Vengai

மருத்துவமனையில் மாறிய குழந்தை!

ஜூலை 10, 1949 அன்று பம்பாயில் பிறந்த சுனில் கவாஸ்கர், மருத்துவமனையில் செவிலியர் ஒருவரால் தவறுதலாக மாற்றப்பட்டார். பின்னர் காதில் மச்சமில்லாததை கவனித்த அவருடைய மாமா, அது கவாஸ்கர் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளார். மீனவ பெண் ஒருவரின் குழந்தையாக கவாஸ்கர் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Sunil Gavaskar

முதல் ரன் லெக் பை மூலம் வந்தது!

10,000 ரன்களை கடந்த முதல் வீரரான சுனில் கவாஸ்கரின் முதல் ரன் லெக் பை மூலம் வந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் கவாஸ்கர் எதிர்கொண்ட முதல் பந்தை ஹோல்டர் அவரது காலில் வீசினார். பந்து காலில் பட்டு ஃபைன் லெக்கில் சென்ற போது, பேட்டில் பட்டு சென்றதாக நினைத்து அம்பயர் 2 ரன்கள் கொடுத்தார். பதட்டமாக இருந்த கவாஸ்கருக்கு அது நம்பிக்கையளித்தது.

Sunil Gavaskar

மல்யுத்த வீரராக விரும்பிய கவாஸ்கர்!

சுனில் கவாஸ்கர் சிறுவயதில் இருந்தே மல்யுத்தத்தின் மீது ஆர்வமிக்கவாராக இருந்துள்ளார். அதுதான் தன்னுடைய விளையாட்டாக இருக்கவும் அவர் விரும்பியுள்ளார். இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற அவருடைய வலுவான ஆசை படிப்படியாக அவருடைய மல்யுத்த ஆசையை முறியடித்தது. அதன் பிறகு கிரிக்கெட்டில் ஒரு சகாப்தத்தையே நிகழ்த்தி காட்டினார் சன்னி.

Sunil Gavaskar

மைதானத்திலேயே முடிவெட்டிய முதல் வீரர்!

1974ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் போது, கவாஸ்கரின் நீண்ட சுருள் முடி அவரை பேட்டிங் செய்ய முடியாமல் அவருடைய கண்ணில் பட்டு துன்புறுத்தியுள்ளது. அதனால் பந்தை பார்க்க முடியாமல் தவித்த சன்னி, அம்பயரின் அனுமதிபெற்று மைதானத்திலேயே தன்னுடைய முடியை வெட்டிக்கொண்டு விளையாடினார்.

Sunil Gavaskar

திரைப்படத்துறையில் கவாஸ்கர்!

சுனில் கவாஸ்கரின் பல ரசிகர்களுக்கு அவர் ஒரு நடிகர் என்பது தெரியாது. கவாஸ்கர் சவ்லி பிரேமச்சி என்ற மராத்தி திரைப்படத்தில் 1980-ல் முதன்முதலில் அறிமுகமானார். பின்னர் 1988-ல் நசீருதீன் ஷா நடித்த மாலமால் படத்திலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

Sunil Gavaskar