‘700* விக்கெட்டுகள்’ to ‘தந்தை-மகன் விக்கெட்’ : WI-க்கு எதிரான போட்டியில் அஸ்வின் செய்த 5 சம்பங்கள்!

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவற்றில் முக்கியமான 5 சாதனைகளை இங்கே பார்ப்போம்...

ரவிச்சந்திரன் அஸ்வின்

தந்தை - மகன் 2 தலைமுறை வீரர்கள் OUT!

12 வருடத்திற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின், தற்போது அவருடைய மகன் டேகனரின் சந்தர்பாலையும் அவுட்டாக்கி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தந்தை - மகன் என 2 பேரின் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய பவுலரானார் அஸ்வின்.

Shivnarine Chandarpaul

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சாதனை!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் அஸ்வின். அந்த வரிசையில் கும்ப்ளே (3), ஹர்பஜன் (3), இஷாந்த் சர்மாவுடன் (3) இணைந்துள்ளார் அஸ்வின்.

R Ashwin

ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!

93 டெஸ்ட் போட்டிகளில் 33வது முறையாக 5 விக்கெட்டுகளை (FIFER) வீழ்த்திய அஸ்வின், உலக வீரர்கள் பட்டியலில் 181 போட்டிகளில் 32 முறை வீழ்த்திய ஜேமி ஆண்டர்சனை பட்டியலில் பின்னுக்கு தள்ளினார். இதன்மூலம் அதிக FIFER எடுத்தவர்கள் வரிசையில் உலகளவில் 6வது வீரராக உள்ளார் அஸ்வின்.

James Anderson

700* சர்வதேச விக்கெட்டுகள்!

அல்சாரி ஜோசப் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 700வது விக்கெட்டை பதிவு செய்துள்ளார். உலக அரங்கில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் 702* விக்கெட்டுகளுடன் அஸ்வின், அனில் கும்ப்ளே (956) மற்றும் ஹர்பஜன் (711) இருவருக்கும் அடுத்த இடத்தில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானை நெருங்கிய அஸ்வின்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில், விண்டீஸ் ஜாம்பவான் மார்ஷலை பின்னுக்கு தள்ள இன்னும் ஒரு முறை 5 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அந்த வரிசையில் மார்ஷல் (6 முறை), ஹர்பஜன் (5 முறை), அஸ்வின் (5 முறை) என உள்ளனர்.

Malcolm Marshall