HBD MS Dhoni | கேப்டன் கூல் சொன்ன 10 விஷயங்கள்!

Angeshwar G

“போராடி கிடைக்கும் தோல்வி கூட கொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான்”

ms dhoni

“உங்களுக்கு உண்மையில் ஒரு கனவு இல்லையென்றால், நீங்கள் உங்களை முன்னோக்கித் தள்ள முடியாது. இலக்கு என்னவென்றே உங்களுக்குத் தெரியாமல் போய்விடும்”

“தலைமை பொறுப்பு என்பது நாம் நினைத்ததை நடத்திக் காட்டுவதற்கான ஒரு கருவி மட்டுமே”

“என் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளன. நான் தொடரை வென்றாலும் தோற்றாலும் அவை என்னிடம் ஒரே மாதிரிதான் நடந்துகொள்ளும்”

“சிறந்த கிரிக்கெட்டராக அல்லாமல் சிறந்த மனிதராக மக்கள் என்னை நினைவில் வைத்திருக்கவே விரும்புகிறேன்”

ms dhoni

“ஒரு தனிநபரை நீங்கள் முழுமையாக அறியாதவரை அவர் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆலோசனை வழங்குவது மிக கடினம்”

“உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடினமான காலகட்டத்தை கடக்கும் போதே அதிகம் கற்றுக்கொள்கிறீர்கள்”

“சதம் அடிப்பதை விட கூட்டணி அமைப்பதே எனக்கு முக்கியம். அப்படி நடந்துவிட்டால் சதம் தானாய் வரும்”

“பெரியவர்களின் பேச்சை எப்போதும் கேளுங்கள். அது அவர்கள் பெரியவர்கள் என்பதற்காக அல்ல, தவறு செய்து நிறைய அனுபவங்களை அவர்கள் பெற்றிருப்பர் என்பதற்காக!”

“நீங்கள் செய்யும் தவறுகள் சரியானவை. அதை நீங்கள் மீண்டும் செய்யாதிருக்கும் வரை...”