ராஜராஜனால் கட்டப்பட்ட கோயிலில் ஆஷ்டான நவராத்திரியில் வராகி அம்மனின் அவதாரங்கள்!

Jayashree A

ஆஷாட நவராத்தி காலம் என்பது ஆனி மாதம் தொடங்கும் அம்மாவாசை முதல் நவமி வரை கொண்டாடப்படும் ஒரு வைபவம். இந்த வைபவமானது வராஹி தேவிக்கு உரியதாகும் .

வெண்ணெய் அலங்காரத்தில் வராகி தஞ்சாவூர் | சுகந்தி

மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.

ரக்தாபிஜா என்ற அரக்கனைக் கொன்றது குறித்து தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

தேங்காய்பூ அலங்காரத்தில் வராகி அம்மன் தஞ்சை | சுகந்தி

அந்தகாசுரன் எனப்படும் அரக்கன், ரக்தாபிஜா அரக்கனைப் போல அவனுடைய ரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் வலிமையை உடையவன். ஆதலால், அந்தகாசுரனை அழிப்பதற்கு சிவன் வராகியின் உதவியைப் பெற்றார் எனக் கதையில் சொல்லப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியாக உள்ளது.

நவதானிய அலங்காரத்தில் வராகி அம்மன் தஞ்சாவூர் | சுகந்தி