Vaijayanthi S
உலகின் மிக உயரமான விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை.. அது தாய்லாந்தின் சாச்சோங்சாவ் (Chachoengsao) மாகாணத்தில் உள்ள க்லோங் குவான் (Khlong Khuan) மாவட்டத்தில் உள்ளது. இது இந்த வெண்கலத்தாலான சிலை.. இதன் உயரம் 39 மீட்டர் 128 அடி ஆகும்.. இந்த சிலை மிக உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. இது 2009-2012ஆம் காலகட்டத்தில் கட்டப்பட்டது.
தாய்லாந்தின் சாச்சோங்சாவோவின் மையப்பகுதியில் இருக்கும் இந்த விநாயகர் சிலை வானத்தை நோக்கியபடி திறந்தவெளியில் நின்ற நிலையில் அமைக்கப்பட்டிள்ளது.. அந்த விநாயகரை பார்க்கும் அனைவரும் வானத்தை நோக்கியபடிதான் பார்த்து வணங்குமாறு இருக்கும்.
தாய்லாந்தில் விநாயகரை வழிபடப்படுகிறார்கள் என்பது ஆச்சரியமான ஒரு விஷயமாக இருந்தாலும், உண்மையில், தாய்லாந்திற்கு பயணம் செய்த அனைவருக்கும் எவ்வாறு அங்கு விநாயகர் வழிபடப்படுகிறார் என்பதை அறிவார்கள்.
தாய்லாந்தின் சர்வதேச பூங்காவில் சுமார் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அந்த விநாயகர் சிலை உள்ளது... சிலையை வடிவமைத்த கலைஞர் பிடக் சலூம்லாவ் ஆவார். இவர், இந்த விநாயகர் சிலை தாய்லாந்தின் செழிப்பை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த தெய்வத்திற்கு நான்கு கைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு பழங்களை வைத்திருக்கின்றன. கரும்பு, பலாப்பழம், வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள். மேல் வலது கையில் மிகுதி மற்றும் செழிப்பின் அடையாளமான பலாப்பழம் உள்ளது.. மேல் இடது கையில் இனிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் கரும்பு உள்ளது.. கீழ் வலது கையில் ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தின் அடையாளமான வாழைப்பழம் உள்ளது, இறுதியாக, கீழ் இடது கையில் தெய்வீக அறிவு மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய ஒரு பழமான மாம்பழம் உள்ளது.
இந்த விநாயகரின் உயரம் தாய்லாந்தின் முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் தாமரை கிரீடம் ஞானத்தைக் குறிக்கிறது. உச்சியில், புனிதமான "ஓம்" சின்னம் உள்ளது.. அது தேசத்தையும் உலகத்தையும் பாதுகாப்பவராக உள்ளார் என்பதை குறிக்கிறது..
இந்த சிலை, இந்தியாவின் எல்லையில் இல்லை என்றாலும், ஆசியாவில் மிகவும் உயரமான விநாயகர் சிலைகளில் ஒன்றாக உள்ளது, இது உலகின் பல்வேறு கலாச்சாரங்களில் விநாயகர் எவ்வாறு போற்றப்படுகிறார் என்பதை நமக்கு காட்டும் விதமாக உள்ளது.