Vaijayanthi S
50 வயதுக்கு மேல் முதுமை வேகமடைகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. செல் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி, 50 வயதிற்கு மேல்தான் முதுமை வேகமடைகிறது, இந்த காலகட்டத்தில் ரத்த நாளங்கள் பலவீனமடைவது, இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள, பழங்கள், காய்கறிகள் போன்ற ரத்த நாளங்களுக்கு நன்மை பயக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டுமென, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமும் 40 நிமிடங்கள் வரை மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும், மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்,புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டுமெனவும்,அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்வது, மக்கள் நடுத்தர வயதை நெருங்கும்போது, ஆரம்பகால சுகாதார விசயங்களை மேம்படுத்தவும், ஆரோக்கியமான வயதானதை ஊக்குவிக்கவும் உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.