ஆர்கானிக் பால் முதல் அரிசிப்பால் வரை... பசும்பாலுக்கு மாற்றாக, இத்தனை பால் வகைகள் இருக்கா?! #MilkDay

ஜெ.நிவேதா

பசும்பாலில் உள்ள அனைத்து கொழுப்பு உள்ளடக்கங்களையும் நீக்கிவிட்டு தயாரிக்கப்படும் பால் வகை இந்த Skimmed Milk.

பசும்பாலில் இயற்கையாக உள்ள சர்க்கரை லாக்டோஸ், செயற்கையாக நீக்கப்படும். இதை Lactose free milk என சந்தையில் விற்கப்படுகிறது.

சோயாபீன் அல்லது சோயா புரதம் ஆகியவற்றில் இருந்து இந்த சோயா பால் தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மதிப்பில் பசும்பாலுடன் மிகவும் ஒத்திருக்கும் இவ்வகை பால், Creamy தன்மையுடனும், லேசான இனிப்புச் சுவையுடனும் இருக்கும்.

பாதாம் பாலில் லேசான இனிப்புச்சுவை இருக்கும். இவ்வகை பாலில் கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும். ஆனால் வைட்டமின் இ நிரம்பியுள்ளது.

தேங்காய் பால், Creamy-ஆக இருக்கும். பெரும்பாலும் நம் வீடுகளிலேயே இது அன்றாடம் செய்வதுண்டு! இதில் பால் போலவே இயற்கையாக இனிப்புச் சுவை இருக்கும். அதேநேரம் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருக்காது.

ஓட்ஸ் பால் வழக்கமான பாலுக்கு சிறந்த ஆரோக்கியமான மாற்றாகும். மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு இது சிறந்த ஆப்ஷன்! ஏனெனில் ஓட்ஸ், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக இருக்கும்.

அரிசி பால், வெள்ளை அல்லது பழுப்பு அரிசியை தண்ணீரில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஸ்வீட் மற்றும் ஸ்மூத்திகளில், இதை பயன்படுத்தலாம். மற்ற வகை பாலை விட அதிக கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கும் இவ்வகை பாலில், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்ததிருக்கும்.

முந்திரிகளில் தண்ணீர் சேர்க்கப்பட்டு cashew milk தயாரிக்கப்படுகிறது. இயல்பிலேயே இனிப்பு இருப்பதால் ஸ்மூத்திகள், காபி மற்றும் ஸ்வீட்களில் இதை பயன்படுத்தலாம். இதில் கலோரிகள், புரதம் மற்றும் சர்க்கரைச்சத்து ஆகியவை குறைவாகவே இருக்கும்.