Vaijayanthi S
குல்ஃபி ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்
1. கண்டன்ஸ் மில்க் - 200 மில்லி
2. விப்பிங் கிரீம் - 2 கப்
3. பிஸ்தா - 2 கப்
4. வெண்ணிலா எசன்ஸ் - 2 ஸ்பூன்
5. ஏலக்காய் பொடித்தது - 2 டீஸ்பூன்
6. குங்குமப்பூ - 2 சிட்டிகை
ஐஸ் கிரீம் குல்ஃபி செய்முறை
1. முதலில் ஒரு சிறிய பவுலில் குங்குமப்பூக்களை வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும்..
2. கண்டன்ஸ்டு மில்க்கை ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாக குளிர்விக்க வேண்டும்..
3. அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் குளிர்ந்த க்ரீமை மீடியம் ஸ்பீடில் வைத்து நுரை உருவாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
4. பின்பு வேகத்தை சிறிது குறைத்து, விப்பிங் க்ரீமை கண்டன்ஸ்டு மில்க் மற்றும் வெண்ணிலா எசென்ஸுடன் கலக்கி நன்றாக அரைக்க வேண்டும்.
5. அடுத்து, மிக்ஸியின் வேகத்தை மீண்டும் ஒருமுறை அதிகரித்து, க்ரீம் நன்றாக நுரை போல் வரும்வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
6. இப்போது உங்கள் ஐஸ்கிரீம் பேஸ் தயாராகிவிடும். அதில் அரைத்த பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூக்கள் கலந்த லிக்வீடை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் சமமாகப் பரவும் வரை மிக்ஸியை மீடியம் ஸ்பீடில் வைத்து அரைத்து கலக்கி விட வேண்டும்.
7. பின்னர் உங்கள் ஐஸ்கிரீமை ஒரு பவுலில் மாற்ற வேண்டும்.. பின்னர் அதனை குறைந்தது 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்து உறைய வைக்க வேண்டும். இப்போது ஐஸ் கிரீம் குல்ஃபி தயார்..