Vaijayanthi S
எப்போதும் புன்னகையுடன் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வோம், ஏனென்றால் புன்னகையே அன்பிற்கான தொடக்கம்.
தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மோசமான வறுமை..
ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை.
சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் அதில்தான் உங்களது வலிமை உள்ளது.
மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்
நாம் இந்த வேலையை செய்கிறோம் என்பது அற்புதமல்ல, அதை செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே அற்புதம்.
நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.
நம் அனைவராலும் உயர்ந்த விஷயங்களைச் செய்யமுடியாது. ஆனால், உயர்ந்த அன்பைக் கொண்ட சிறிய விஷயங்களைச் செய்யமுடியும்.
அன்பு தான் உனது பலவீனம் என்றால் உலகில் மிகப்பெரிய பலசாலி நீ தான்' என்ற வரியை உதித்தார் அன்னை தெரசா,