டி.கே.சிவக்குமார் to அஜித் பவார்; இந்திய மாநிலங்களை அலங்கரிக்கும் துணை முதல்வர்கள் யார், யார்?

Prakash J

ஆந்திரப் பிரதேசம்:

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருக்க, அம்சத் பாஷா ஷேக் பேபாரி, புடி முத்தால நாயுடு, கே.நாராயண சுவாமி, கோட்டு சத்தியநாராயணா, ராஜன்னா டோரா பீடிகா ஆகிய 5 பேர் துணை முதல்வர்களாக உள்ளனர்.

ஜெகன் மோகன் ரெட்டி | twitter

அருணாச்சல் பிரதேசம்:

பாஜகவைச் சேர்ந்த பெமா காண்டு முதல்வராக இருக்கும் நிலையில், செளனா மெயின் துணை முதல்வராக உள்ளார்.

பெமா காண்டு | twitter

பீகார்:

ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதல்வராகப் பதவியில் இருக்கும் நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார்.

நிதிஷ்குமார் | twitter

ஹரியானா:

பாஜவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராய் அங்கம் வகிக்க, துஷ்யந்த் செள்தலா துணை முதல்வராக உள்ளார்.

மனோகர் லால் கட்டார் | twitter

ஹிமாச்சல் பிரதேசம்:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக உள்ள நிலையில், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி உள்ளார்.

சுக்விந்தர் சிங் சுகு | twitter

மகாராஷ்டிரா:

சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார். தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரான அஜித் பவாரும் தற்போது துணை முதல்வராகப் பதவியேற்றதால் இம்மாநிலத்தில் 2 துணை முதல்வர்கள் உள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே | twitter

மேகாலயா:

தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட் சங்மா முதல்வராக இருக்கும் நிலையில், பிரஸ்டோன் டைன்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.

கான்ராட் சங்மா | twitter

நாகாலாந்து:

என்டிபிபி கட்சியைச் சேர்ந்த நெய்பியூ ரியோ முதல்வராகத் தொடரும் நிலையில், துணை முதல்வர்களாக என்டிபிபி மூத்த தலைவர் ஜெலியாங், பாஜக மூத்த தலைவர் யான்தன்கோ பேடன் ஆகியோர் உள்ளனர்.

நெய்பியூ ரியோ | twitter

மிசோரம்:

மிசோரம் தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த் ஜோரம்தங்கா முதல்வராக உள்ள நிலையில், டவ்ன்லூயாவு துணை முதல்வராக உள்ளார்.

ஜோரம்தங்கா | twitter

உத்தரப்பிரதேசம்:

பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் நிலையில், கேசவ் பிரசாத் மயூரா மற்றும் பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.

யோகி ஆதித்யநாத் | twitter

கர்நாடகா:

காங்கிரஸைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் உள்ளார்.

சித்தராமையா | twitter