கேரளாவின் இந்த பீச்-களுக்கு நிச்சயம் ஒரு விசிட் அடிங்க! #VisualStory

Justindurai S

குழுப்பிள்ளி கடற்கரை, கொச்சி

இந்த கடற்கரையின் விசேஷம், இதற்குச் செல்லும் பாதை. கடற்கரையை நோக்கி நீங்கள் நடந்து செல்கையில் இரு கரைகளிலும் நீர் ததும்பும் மீன் பண்ணைகளை பார்க்கலாம்.

kuzhupilly beach

முனாம்பம் கடற்கரை, கொச்சி

இங்குதான் பெரியார் ஆறு அரபிக் கடலில் கலக்கிறது. இங்கு வருடம்தோறும் நடைபெறும் காற்றாடித் (பட்டம்) திருவிழா தவிறவிடக் கூடாத ஒன்று. சமீபத்தில் இங்கு சில நீர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

Munambam Beach

முழப்பிலங்காடு பீச், கண்ணூர்

காரிலிருந்து இறங்காமலேயே, கடற்கரை மணலில் உங்கள் பாதம் படாமலேயே கடற்கரையின் அழகை ரசித்திருக்கிறீர்களா? இங்கு அது சாத்தியப்படும்!  பறவை ஆர்வலர்களுக்கும் இது முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

Muzhappilangad Beach

வர்கலா பீச், திருவனந்தபுரம்

இங்குள்ள செங்குத்தான மலை உச்சிகளும், பொன்னிற மணல்களும், கடற்கரையெங்கும் பூத்து குலுங்கும் காட்டுப்பூக்களும் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

Varkala beach

தைக்கல் பீச், ஆலப்புழா

யார் தொந்தரவும் இல்லாத, அமைதியான கடற்கரையில் உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் ஆலப்புழா மாவட்டம் தைக்கல் பூச்சுக்குத்தான் வர வேண்டும்

Thyckal beach

திக்கோடி கடற்கரை, கோழிக்கோடு

இதுவும் ஒரு டிரைவ் இன் பீச் தான். நான்கு கிலோமீட்டர் தூரம் கொண்ட இக்கடற்கரையில், இங்கிருக்கும் இறுகிப் போன மணல் தரையில் காலாற நடந்தவாறே சென்று சூரியன் மறையும் காட்சியையும் கண்டு ரசிக்கலாம்!

Thikkodi beach

குளவி பீச், கோழிக்கோடு

இந்த ஆழமற்ற, பரந்து விரிந்த கடற்கரையை உள்ளூர் மக்களின் உதவியில்லாமல் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அடர்த்தியான அலையாத்தி காடுகளுக்கு இடையே ஒளிந்திருக்கிறது இந்த பீச்.

Kolavi Beach

மீன்குன்னு பீச், கண்ணூர்

மீனவர்களை தவிர வேறு யாரையும் இந்தக் கடற்கரையில் பார்க்க முடியாது. நீங்கள் தனிமையைத் தேடி வந்தீர்கள் என்றால், இது உங்களுக்கு சிறந்த இடமாக அமையும்.

Meenkunnu Beach

கோவளம் பீச், திருவனந்தபுரம்

ஆழமற்ற கடலும், குறைவான அலைகளும் இந்த கடற்கரைக்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன. இங்கு கட்டுமரத்தில் பயணம் செய்யலாம், சர்ஃபிங் செய்யலாம். கோவா கடற்கரையை விட இதன் சூழல் அமைதியானது.

kovalam beach

ஆலப்புழா பீச்

கிழக்கின் வெனிஸ் என அழகைக்கப்படும் ஆலப்புழா, ஒரு தீவைப் போல் காட்சி தரும். கழிமுகத்திற்கும், படகு வீட்டிற்கும் மீன்பிடி தொழிலுக்கும் புகழ்பெற்றது ஆலப்புழா. ஒவ்வொரு புது வருடப் பிறப்பின் போதும் ஆலப்புழாவில் ஒருங்கிணைக்கப்படும் பீச் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 

ALLEPPEY BEACH