இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள்!

PT WEB

ஒமேகா-9 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ள ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் அவகேடா போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறுகின்றனர்.

பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற விதைகளிலும் ஒமேகா-9 இருப்பதால் அவற்றை உண்பது சரும நலன் மற்றும் அறிவாற்றலுக்கு நல்லது என்கிறார்கள்.

முக்கியமாக, இந்த ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் இன்சுலின் செயல் திறனை உயர்த்தி, டைப் 2 நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.