ஆண்கள் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய 8 ஹெல்த் டிப்ஸ்! #InternationalMensHealthWeek

ஜெ.நிவேதா

சர்வதேச ஆண்கள் ஹெல்த் வாரம்!

ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில், ஆண்கள் ஹெல்த் பற்றி பேசுவதற்கென்றே தனியாக ஒரு வாரம் ஜூன் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அப்படி இந்த வருடம் ஜூன் மாதத்தில் 12 - 18ம் தேதிகளுக்குட்பட்ட வாரம், ஆண்கள் ஹெல்த் வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்று, ஆண்கள் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில ஹெல்த் டிப்ஸ் இதோ...

ஆண்கள் நலன்

உங்களுக்குன்னு ஒரு டாக்டர்...

உங்களுடைய உடல் நலம், மனநலம்னு எல்லாவற்றையும் மனம்விட்டு பேச, நிச்சயம் உங்களுக்கென ஒரு மருத்துவரை அனுகுங்க. (குடும்ப டாக்டர் போல)

ஆண்கள் நலன்

உடம்புக்கு முடியலைன்னா டாக்டரை பாருங்க...

நிறைய ஆண்கள் செய்யும் தவறு, உடல்நல பிரச்னைகளை வெளியே சொல்லாமலே இருப்பது. அதை செய்யாதீங்க. எந்தவொரு அறிகுறியையும் உதாசீனப்படுத்தக்கூடாது. ஏன்னா... உங்கள் நலன், உங்கள் குடும்பத்துடைய நலன்!

ஆண்கள் நலன்

வயதுக்கேற்ற, உடலுக்கேற்ற வொர்க்-அவுட் அவசியம்...

ஏரோபிக்ஸ், தசை பயிற்சிகள், ஸ்ட்ரெட்சஸ் என உங்களுடைய உடலுக்கு ஏற்ற ஏதாவதொரு உடற்பயிற்சியை வாழ்க்கையில் ரெகுலர் பண்ணிக்கோங்க. ஹெவியான உடற்பயிற்சிகள் செய்வோர், நிச்சயம் மருத்துவரிடமும் உடற்பயிற்சி ஆலோசகரிடமும் ஆலொசனை பெறவேண்டும்.

ஆண்கள் நலன்

வாக்கிங் கட்டாயம்!

அன்றாடம் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி கட்டாயமாக்கிக்கோங்க. இனி தான் தொடங்க வேண்டும் என்பவர்கள், 10 நிமிடத்திலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக 45 என்ற இலக்கை அடையலாம்

ஆண்கள் நலன்

7 மணி நேரம் தூங்குங்க

பெரும்பாலான ஆண்கள், தூக்கத்தை கோட்டைவிடுவதுண்டு. தூக்கத்தை, எதற்காகவும் நிச்சயம் விட்டுக்கொடுக்கக்கூடாது. குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்கவேண்டும். அதற்காக பகலில் தூங்கியோ, பாதி பாதியாக தூங்கியோ நேரத்தை செலவழிக்க கூடாது. இரவில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் தூங்குங்க.

ஆண்கள் நலன்

மனநலன் ரொம்ப முக்கியம்

ஹெல்த் என்றவுடன், உடல்நலனை மட்டுமே பலரும் நினைப்பதுண்டு. அப்படியல்ல. ‘ஆண் அழக்கூடாது, ஆண் வாழ்நாள் முழுக்க சம்பாதித்துக்கொண்டே இருக்க வேண்டும்’ போன்ற சமூக கட்டமைப்புகளால் ஆண்களும் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாவதுண்டு. இதிலிருந்து விடுபட தினமும் தியானம் செய்ங்க பாஸ்! மனநலன், முக்கியம் பிகிலே...

ஆண்கள் நலன்

குடும்ப நோய்களை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்!

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் தொடங்கி புற்றுநோய் வரை பல நோய்கள் குடும்ப பின்னணியால்தான் பலருக்கும் ஏற்படுகிறது. அதனால உங்க குடும்பத்துல, மூத்தவர்களுக்கு இருக்கும் நோய் பாதிப்புகளை அறிந்துவைத்துக்கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை நீங்க உங்கள் உடலை சுய பரிசோதனைக்கு (மருத்துவ வழிகாட்டுதலின்படி) உட்படுத்திக்கோங்க

ஆண்கள் நலன்

மது, சிகரெட்டுக்கு ஸ்ட்ரிக்ட் நோ!

இதற்கு விளக்கமே தேவை இல்ல. ஏன்னா, மதுவும் சிகரெட்டும் புகையும் போதையும், உயிரைக்கொல்லும். அவ்ளோதான், டாட்!

ஆண்கள் நலன்