இந்த உணவுகளையெல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது!

PT WEB

பால் மற்றும் புளிப்பான பழங்கள் போன்றவற்றை சேர்த்து எடுத்துக்கொண்டால் செரிமானத்தில் கோளாறு ஏற்படும். கனமாக இருக்கும் பாலையும் தவிர்க்கலாம்.

தகவல் உதவி: ஆயுர்வேத மருத்துவர், மதுமிதா

தேனும் நெய்யும் சம அளவுகளில் எடுத்துக்கொள்வது மிக மிக ஆபத்தானது என்பதால், அத்தவறை செய்யாதீர்கள்!

HONEY AND GHEE | FACEBOOK

தயிர் மற்றும் சிக்கன் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை கடினமாக்குகிறது. ஆகவே இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்

Chicken and Curd | Twitter

வெந்நீரில் தேனையோ அல்லது தேனை சூடாக்கியோ சாப்பிடுவது ஆபத்து. தயவுசெய்து தவிர்க்கவும்!

HONEY | TWITTER

உபோதகா (Upodika) எனப்படும் பசலைக்கீரையோடு எள்ளை சேர்த்து சாப்பிடக்கூடாது. இது வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாக அமையலாம் என்பதால் மிக மிக கவனம் தேவை.

Type of green and sesame | TWITTER

இரவில் தயிர் சாப்பிடுவது பித்தம் மற்றும் கபம் போன்றவற்றின் சமநிலையை இழக்கச் செய்யும். இதனால் தூக்கம் தொடர்பான பிரச்னைகள், சுவாச பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே இரவில் தயிரை தவிர்ப்பது சிறப்பு.

Curd | Twitter

பால் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் ஒருவித கடினமான உணர்வு ஏற்பட்டு செரிமானத்தில் பாதிப்பு ஏற்படும். ஒருவேளை அப்படி சாப்பிட்டால், ஓடியாடி உற்சாகமாக அடுத்து சில மணி நேரம் இருப்பீர்களேயானால், சாப்பிடுங்கள்.

Curd and Milk | Facebook

பால் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் கடினமாகி, தோல் பிரச்னைகள் ஏற்பட காரணமாக அமைகிறது. ஆகவே தவிர்ப்பது நல்லது.

MILK AND SALT | FACEBOOK

தேன் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடும்போது , செரிமானம் கடினமாகிவிடும். எனவே முடிந்தவரை இந்த காம்பினேஷன் உணவுகளை தவிர்க்கலாம்.

RADISH AND HONEY | TWITTER

இயற்கையாகவே மீன் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். பால் குளிர்ச்சியயை ஏற்படுத்தும். ஆகவே பாலும் மீனும் பொருந்தாதவை. எனவே சேர்த்து சாப்பிடக்கூடாது.

- ஜெனிட்டா ரோஸ்லின் .S.

FISH AND MILK | TWITTER