”துணிவு, வாரிசு to மாமன்னன்” - தமிழ் திரையுலகில் முதல் 6 மாதங்களில் ஹிட் அடித்த படங்களின் பட்டியல்!

சங்கீதா

துணிவு

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியான ‘துணிவு’ படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.200 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலித்திருந்தது.

வாரிசு

விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியான ‘வாரிசு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

பொம்மை நாயகி

யோகி பாபு நடிப்பில், ஷான் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிப். 3 ஆம் தேதி வெளியான ‘பொம்மை நாயகி’ ஓரளவு விமர்சன ரீதியாக கவனம் பெற்றது.

டாடா

கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் பிப். 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கவனம் பெற்றது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி ரூ. 20 கோடிக்கும் மேலாக வசூலித்தது.

வாத்தி

வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா நடிப்பில் பிப். 17 ஆம் தேதி வெளியான ‘வாத்தி’ திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. தெலுங்கு இயக்குநர் இயக்கியது என்பதால் தமிழை காட்டிலும் ஆந்திரா, தெலங்கானாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அயோத்தி

சசிகுமார் நடிப்பில், ஆர். மந்திரமூர்த்தி இயக்கத்தில் மார்ச் 3 ஆம் தேதி வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் விமர்சன ரீதியாக கவனம் கிடைத்தது. இயக்குநர் சசிகுமாருக்கு நடிப்பு ரீதியாக நல்ல கம்பேக் கொடுத்திருந்தது.

பத்து தல

சிம்பு நடிப்பில், ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் மார்ச் 30 ஆம் தேதி வெளியான ‘பத்து தல’ திரைப்படமும் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக வரவேற்பு பெற்றது. ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்தது.

விடுதலை-1

வெற்றிமாறனின் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் மார்ச் 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை முதல் பாகம். இந்தப் படமும் பார்வையாளர்களிடையே சிறப்புக் கவனம் பெற்றது. 18+ பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், கொஞ்சம் வசூலில் ஆவரேஜ் என்ற அளவிலேயே இருந்தது.

திருவின் குரல்

ஹரிஷ் பிரபு இயக்கத்தில், அருள்நிதி, பாரதிராஜா நடிப்பில் ஏப்ரல் 14-ம் தேதி வெளியான ‘திருவின் குரல்’ திரைப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.

யாத்திசை

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சக்தி மித்ரன், குரு சோமசுந்தரம் நடிப்பில் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியான ‘யாத்திசை’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு அடைந்தது.

பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம் ரூ. 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

குட்நைட்

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் மே 12 ஆம் தேதி வெளியான ‘குட்நைட்’ திரைப்படமும் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றது.

போர் தொழில்

சிறிய பட்ஜெட்டில் உருவான ‘போர் தொழில்’ திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி வெளியானது. 22 நாட்களில் 50 கோடி ரூபாய் கிளப்பில் இப்படம் இணைந்துள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கியிருந்த இந்தப் படத்தில் சரத்குமார், அசோக் செல்வன் நடித்திருந்தனர்.

மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ம் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் முதல் நாளிலேயே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.8.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.