இந்த வாரம் தியேட்டர்ல ஒண்ணுமில்ல... எல்லாமே OTT தான்..!

Johnson

Choona (Hindi) Netflix - Aug 3

எதிரியின் எதிரி நண்பன் என்ற லாஜிக்கின் படி, தங்களின் எதிரி ஒரே ஆள் தான் என புரிந்து கொள்ளும் குழு, அந்த எதிரியிடமிருந்து கொள்ளையடிக்க முடிவு செய்கிறது.

Dayaa (Telugu) Hotstar - Aug 4

ஃப்ரீசர் வேன் டிரைவர் ஒருவர், வேனுக்குள் பிணம் இருப்பது தெரிந்த பின் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.

The Hunt for Veerappan (English) Netflix - Aug 4

வீரப்பனின் வாழ்க்கையையும், அவர் மரணத்தை சுற்றிய மர்மங்களையும் பற்றி சொல்லும் ஆவணக் குறுந்தொடர்

Soulcatcher (Polish) Netflix - Aug 2

மிகவும் ஆபத்தான ஆயுதக் கடத்தல் ஒன்றை தடுத்து, அந்த ஆயுதங்களை கைப்பற்றும் பொறுப்பு ஹீரோவுக்கு. அதை செய்வதில் இருக்கும் சிக்கல்கள் தான் படத்தின் கதை.

Erumbu (Tamil) Prime - July 31

வறுமையான சூழலில், சித்தியின் கோபங்களையும் சகித்துக் கொண்டு வாழும் அக்கா - தம்பியின் கதை தான் `எறும்பு’.

Guardians of the Galaxy Vol. 3 (English) Hotstar - Aug 2

கமோராவின் இழப்பிலிருந்து பீட்டர் மீண்டு மறுபடி உலகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை எப்படி கையில் எடுக்கிறார்,

Rangabali (Telugu) Netflix - Aug 4

தன் ஊரை நேசிக்கும் ஒரு இளைஞன், அதற்கு ஒரு ஆபத்து வரும் போது எப்படி தடுக்கிறான் என்பதே கதை.

Pareshan (Telugu) SonyLIV - Aug 4

ஒரு இளைஞனின் வாழ்க்கையில், காதலில், நட்பில் வரும் சிக்கல்கள் தான் படத்தின் கதை.

Subramaniapuram (Tamil) - Aug 4

சசிக்குமார் இயக்கிய `சுப்ரமணியபுரம்’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறார்கள்.

The Meg 2: The Trench (English) - Aug 4

முதன்மைக் கதாபாத்திரம் ஜேசன் ஸ்டாதம் தான். அதே ராட்சத சுறா தன் இதிலும் வில்லன்.