இந்த வாரம் வெளியாகும் சீரிஸ்.. OTT Series

Johnson

Barracuda Queens - June 5

விடுதலையாக, சுயமாக செயல்பட விரும்பும் பெண்கள் குழு ஒன்று, கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்களால் அந்த கொள்ளையை நிகழ்த்த முடிந்ததா என்பதே இந்த Barracuda Queens ஸ்வீடிஷ் சீரிஸின் கதை.

Barracuda Queens | Netflix

Saint X - June 7

ஒரு இளம் பெண்ணின் மரணம், அதனால் நிகழும் குழப்பங்கள், மரணமடைந்த பெண்ணின் சகோதரிக்கு தெரிய வரும் உண்மை என த்ரில்லராக உருவாகியிருக்கிறது Saint X சீரிஸ்.

Saint X | Disney Hotstar

Never Have I Ever S4 - June 8

நெட்ஃப்ளிக்ஸின் மிகப் பிரபலமான சீரிஸ் Never Have I Ever நான்காவது மற்றும் இறுதி சீசன் வெளியாகிறது. இந்திய - அமெரிக்க முதல் தலைமுறை பதின் பருவத்தினர் சந்திக்கும் சிக்கல்கள் தான் இந்த சீரிஸின் களம்.

Never Have I Ever | Netflix

The Crowded Room - June 8

1979ல் மேன்ஹட்டனில் ஒரு இளைஞர் கொடூரமான குற்றம் ஒன்றுக்காக கைதாகிறார். அதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் தான் இந்த The Crowded Room சீரிஸின் கதை.

The Crowded Room | Apple Tv

Sarvam Shakthi Mayam - June 9

கொலை, கொள்ளை சீரிஸ்களுக்கு மத்தியில் ஒரு ஆன்மிக சீரிஸாக வருகிறது Sarvam Shakthi Mayam என்ற இந்தி சீரிஸ்.

Sarvam Shakthi Mayam | zee5

Bloodhounds - June 9

மூன்று இளைஞர்கள் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் இறங்குகிறார்கள். அதன் பின் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களே Bloodhounds என்ற கொரியன் சீரிஸின் கதை.

The Shield - June 6

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் பின்னணி நடக்கும் போலீஸ் சீர்ஸ் இந்த The shield. ஏழு சீசன்களுடன் முடிந்த இந்த ஹிட் சீரிஸ், இந்த வாரம் முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகும்

The shield | Amazon Prime