HBD BharathiRaja | ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு! #VisualStory

Prakash J

சினிமா மீதான ஆர்வம் காரணமாக அரசு வேலையை உதறிவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர் பாரதிராஜா. இங்கு பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

நடிகராகும் ஆசையில் சென்னை வந்த பாரதிராஜாவுக்கு, திரையில் ஏற்பட்ட அனுபவங்களே அவரை இயக்குநராக மாற்றியது.

பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல். அவருடைய முதல் படமே, அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

அரங்கத்திற்குள் நடத்தப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை, வெளியே அழைத்துவந்த பெருமைக்குரியவர் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்குப் பல நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறார். அப்படி தனது படங்கள் மூலம் அறிமுகமாகும் நடிகைகளுக்கு பெரும்பாலும் ‘ஆர்’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அவர்.

இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பாரதிராஜா பல படங்களில் முத்திரை பதித்துள்ளார்.

தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கே.பாக்யராஜை நடிகராக அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான்.

பாரதிராஜா திரைப்படங்கள் மட்டுமன்றி சீரியலையும் இயக்கியிருந்தார். `தெக்கத்திப் பொண்ணு’ என்ற சீரியலை அவர் இயக்கியிருந்தார்.

பாரதிராஜாவின் வெற்றித் திரைப்படங்களில், இளையராஜாவின் பங்கு அளப்பரியது.

இளையராஜா, பாரதிராஜா

தன் அம்மாவின் பெயரில் தான் எடுத்த `கருத்தம்மா’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரையே விருது வாங்கச் செய்தார் பாரதிராஜா.