பிஎஸ்என்எல் மற்றும் மைக்ரோமேக்ஸ் இணைந்து குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போனை அறிமுகம் செய்து உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சிம் கார்டு மூலம் இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டது. பின்னர், ஜியோ போன் என்ற பெயரில் இலவசமாக (திரும்பப் பெறத்தக்க வைப்புத்தொகை ரூ.1500) 4G மொபைல் அறிமுகம் செய்தது. இதற்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் மற்றும் மைக்ரோமேக்ஸ் இணைந்து குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போனை அறிமுகம் செய்து உள்ளது. பாரத்-1 என பெயரிப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.2,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் 1ன் சிறப்பம்சங்கள்..
இந்த மொபைலுக்கு என பிரத்தியேகமான திட்டத்தை பிஎஸ்என்எல் செயல்படுத்த உள்ளது. அதாவது ரூ.97 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்க உள்ளது. ஜியோவுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.