Today Rasi Palan - 20 July 2025 PT Web
ஆன்மீகம்

இந்த ராசிக்கு எதிர்ப்புகள் மறையும் நாள்.. இன்றைய ராசிபலன்கள்.. (ஜூலை 20, 2025)

இன்றைய ராசிபலன்களை நமக்கு கணித்து தந்தவர், ஜோதிட ரத்னாகரம் பிரம்மஸ்ரீ செ. பாலசந்தர் - மண்ணச்சநல்லூர்

PT WEB

மேஷ ராசி அன்பர்களே!

மனதளவில் இருந்த கவலைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் தீர்வுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

போட்டிகள் நிறைந்த நாள்.

ரிஷப ராசி அன்பர்களே!

சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். எதையும் சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உருவாகும். தாயாருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தைகள் வழியில் சுபகாரியங்கள் கைகூடி வரும். புதிய பங்குதாரர்கள் பற்றிய எண்ணங்கள் உருவாகும்.

உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உழைப்பு குண்டான மதிப்புகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். மனதளவில் புதிய இலக்குகள் பிறக்கும்.

எதிர்ப்புகள் மறையும் நாள்.

கடக ராசி அன்பர்களே!

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும்.

மாறுபட்ட அனுபவங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். புதிய தொழில்நுட்ப தேடல்கள் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாகும்.

உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.

எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

சிம்ம ராசி அன்பர்களே!

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழல்கள் அமையும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் திருப்தியான சூழல்கள் உருவாகும். உதவி கிடைக்கும் நாள்.

கன்னி ராசி அன்பர்களே!

மனதளவில் ஒரு விதமான குழப்பம் உண்டாகும்.

வழக்கு விஷயங்களில் கவனம் வேண்டும்.

மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் தலையிடாமல் இருக்கவும்.

எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணி நிமித்தமான விஷயங்களை பகிராமல் இருக்கவும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும்.

பரிவு வேண்டிய நாள்.

துலாம் ராசி அன்பர்களே!

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மனம் விட்டுப் பேசினால் தெளிவுகள் பிறக்கும். தந்தைவழியில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினருடன் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். தனம் நிறைந்த நாள்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தர்ம காரியங்களில் மனம் ஈடுபடும். நண்பர்கள் மத்தியில் மதிப்புகள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

தனுசு ராசி அன்பர்களே!

இலக்குகளில் இருந்த குழப்பங்கள் விலகும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். புது தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் அமையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சேமிப்பு தொடர்பான செயல்களில் ஆர்வம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

மகர ராசி அன்பர்களே!

எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். புதிய முடிவுகளில் பலமுறை சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சோர்வு மறையும் நாள்.

கும்ப ராசி அன்பர்களே!

எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும்.

வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கெடுக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.

மீன ராசி அன்பர்களே!

பேச்சுக்களில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். முதலீடு சார்ந்த செயல்களில் ஆலோசனை பெற்று செயல்படவும். உறுதி நிறைந்த நாள்.