சினிமா

பிரபல நடிகர் லோக்நாத் மரணம்

பிரபல நடிகர் லோக்நாத் மரணம்

webteam

பிரபல கன்னட நடிகர் சி.ஹெச்.லோக்நாத் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

ஆயிரத்துக்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் 650 திரைப்படங்களில், குணசித்திர வேடத்திலும் நடித்தவர், கன்னட நடிகர் லோக்நாத். தமிழில், கமல்ஹாசனின் ’பேசும்படம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 

பெங்களூரில் வசித்து வந்த இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள ரவிந்திர கலாஷேத்ராவில் வைக்கப் பட்டுள்ளது. அங்கு திரையுலகினர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.