INDVsBAN: ஷாகிப்பின் சுழலில் சுருண்ட இந்தியா! வங்கதேச அணிக்கு 187 ரன்கள் இலக்கு!

INDVsBAN: ஷாகிப்பின் சுழலில் சுருண்ட இந்தியா! வங்கதேச அணிக்கு 187 ரன்கள் இலக்கு!
INDVsBAN: ஷாகிப்பின் சுழலில் சுருண்ட இந்தியா! வங்கதேச அணிக்கு 187 ரன்கள் இலக்கு!

இந்தியா வங்கதேச அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 187 ரன்களுக்கு சுருண்டுள்ளது இந்திய அணி.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வங்கதேச தலைநகரான தாகாவில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே தங்களுடைய அபாரமான பந்துவீச்சால் மிரட்டினர் வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள். இந்திய அணியின் ஓப்பனரான ஷிகர் தவான் மெஹிடி ஹசன் வீசிய பந்தில் 7 ரன்களில் பவுல்டாகி வெளியேற, தொடர்ந்து பவுண்டரிகள், சிக்சர் என விளாசி நல்ல தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவை 27 ரன்களில் பவுல்டாக்கி வெளியேற்றினார். வங்கதேச அணியின் பிரைம் பவுலரான ஷாகிப் அல் ஹசன். அதே ஓவரில் களமிறங்கிய விராட் கோலியின் விக்கெட்டையும் கைப்பற்றி, ஒரே ஒவரில் இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய பேட்டர்களை அவுட்டாக்கி அசத்தினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் 49 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்கள். ஆனால் இந்திய அணியை மீள விடாமல் தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் 92 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியை பின்னுக்கு தள்ளினர். பிறகு கே.எல்.ராகுலுடன் கைக்கோர்த்த வாசிங்டன் சுந்தர், இந்திய அணிக்கு 50 ரன்கள் பார்டனர்ஷிப் போட 150 ரன்களை கடந்தது இந்திய அணி.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்த, இந்திய அணி நல்ல இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், வாசிங்டன் சுந்தர் 19 ரன்களுக்கு வெளியேற, அடுத்தடுத்து வந்த வீரர்களை தங்களது அபாரமான பந்துவீச்சில் அவுட்டாக்கி வெளியேற்றினர் எபடோட் ஹொசைன் மற்றும் சாஹிப் அல் ஹசன். இறுதிவரைக்கும் போராடிய கேஎல் ராகுல் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 73 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேற அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 186 ரன்களுக்கு சுருண்டது.

அபாரமாக பந்துவீசிய எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளும், சாஹிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும் கைபற்றி அசத்தினர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே ஷாக் கொடுத்தார் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். வங்கதேச அணியின் ஓபனர் ஷாண்டோவை டக் அவுட்டாக்கி வெளியேற்ற, முதல் விக்கெட்டை இழந்த வங்கதேச அணி 15-1 என்ற நிலையில் ஆடிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com