மருத்துவ கலந்தாய்வு: 7.5% இடஒதுக்கீட்டில் 541 இடங்கள் நிரம்பின

மருத்துவ கலந்தாய்வு: 7.5% இடஒதுக்கீட்டில் 541 இடங்கள் நிரம்பின

மருத்துவ கலந்தாய்வு: 7.5% இடஒதுக்கீட்டில் 541 இடங்கள் நிரம்பின

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 541 இடங்கள் நிரம்பின.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 544 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கலந்தாய்வுக்கு 719 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு மூலம் 437 எம்.பி.பி.எஸ் இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கான 107 இடங்களில் 104 இடங்களும் நிரம்பின. மாணவர்கள் தேர்வு செய்யாத பல் மருத்துவ படிப்புக்கான மூன்று இடங்கள் அடுத்தக்கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கலந்தாய்வில் இடம்கிடைத்த 541 பேரில் 212 மாணவர்கள் 2020- 21ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், 329 பேர் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com