கைவிலங்குடன் தப்பியோடிய கொலை கைதி - கண்டுபிடித்து மீண்டும் கைது செய்த போலீசார்

கைவிலங்குடன் தப்பியோடிய கொலை கைதி - கண்டுபிடித்து மீண்டும் கைது செய்த போலீசார்
கைவிலங்குடன் தப்பியோடிய கொலை கைதி - கண்டுபிடித்து மீண்டும் கைது செய்த போலீசார்

தருமபுரி கிளை சிறைக்கு அழைத்து வந்த கொலை குற்றவாளி, காவலர்களை தள்ளிவிட்டு கைவிலங்குடன் தப்பியோடிய கைதியை போலீசார் மீண்டும் கைது செய்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற விஜி, ரப்பர் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி ரூபாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ரூபா, கோபித்துக் கொண்டு தளி அருகே உள்ள குஞ்சிகிரிபாளையத்திற்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குஞ்சிகிரிபாளையம் சென்ற கார்த்திக் ரூபாவை வீட்டுக்கு அழைத்ததாக தெரிகிறது. ரூபா வர மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கார்த்திக் தனது மனைவி ரூபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தனி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, கார்த்திகை தேடிவந்தனர்.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து தேன்கனிக்கோட்டை காவல்நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இளைய மூர்த்தி, காவலர்கள் அசோகன், ராஜசேகர் ஆகிய மூவரும் கார்த்திக்கை தருமபுரி மாவட்ட சிறைச்சாலைக்கு காரில் அழைத்து வந்தனர். அப்போது காரிலிருந்து இறங்கிய கார்த்திக், காவலர் ராஜசேகரை தள்ளிவிட்டு கைவிலங்குடன் தப்பியோடினார்.

இந்நிலையில் இது குறித்து தருமபுரி மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதியமான்கோட்டை மற்றும் தருமபுரி நகர காவல் நிலைய காவலர்கள், சிறைச்சாலை பகுதிக்குச் சென்று தப்பியோடிய கைதியை நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை தொழுநோய் குடியிருப்போர் வளாகப் பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திக்கை காவல் துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com