அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புக்கு நடப்பு கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம்

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புக்கு நடப்பு கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம்
அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புக்கு நடப்பு கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம்

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 520 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று வேலைவாய்ப்புக்கான கல்வியை வழங்கும் விதமாக பாடத்திட்டம் மாற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து அண்ணா பல்கலை அதிகாரிகள் சிலர் கூறுகையில், “பொறியியல் படிப்புக்கான பாடத் திட்டங்களை மாற்றும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழிற்துறையினர் பங்களிப்பு இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. செய்முறை வடிவ கற்றலுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கி, வேலைவாய்ப்புக்கான திறன்களை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளும் விதமாக புதிய பாடத்திட்டம் இருக்கும்.

முதல்கட்டமாக நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய கல்விக்குழுவானது அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்தடுத்த வருடங்களில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும்” என்றனர். மேலும், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com