விவசாயிகளிடம் நுண்ணூட்ட உரங்களை கட்டாயப்படுத்தி விற்றால் கடை உரிமம் ரத்து - அறிவிப்பு

விவசாயிகளிடம் நுண்ணூட்ட உரங்களை கட்டாயப்படுத்தி விற்றால் கடை உரிமம் ரத்து - அறிவிப்பு
விவசாயிகளிடம் நுண்ணூட்ட உரங்களை கட்டாயப்படுத்தி விற்றால் கடை உரிமம் ரத்து - அறிவிப்பு

யூரியா வாங்க வரும் விவசாயிகளிடம் நுண்ணூட்ட உரங்கள் கட்டாயப்படுத்தி விற்றால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

திருவாரூரில் தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ளது, திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் பெற்று சாகுபடி பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனியார் உரக்கடைகளில் யூரியா உள்ளிட்ட உரங்கள் வாங்க செல்லும் விவசாயிகளிடம் பிற நுண்ணூட்ட உரங்கள் வாங்கினால்தான் யூரியா கொடுக்கப்படும் என்று உரக்கடைக்காரர்கள் வலுக்கட்டாயமாக அந்த நுண்ணூட்ட உரங்களை விற்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகாரை அடுத்து திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் உத்தரவின் பேரில் பல்வேறு உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிக விலைக்கு யூரியா விற்ற கடைகள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை கட்டாயப்படுத்தி வாங்க சொன்ன கடைகள் என 10  கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டது, அந்த கடைகளில் ஒரு வாரம் முடிந்த பிறகு தற்போது தடை நீங்கி விற்பனை நடந்து வருகிறது.

இந்நிலையில் யூரியா வாங்க வரும் விவசாயிகளிடம் நுண்ணூட்ட உரங்கள் கட்டாயப்படுத்தி விற்றால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com