முகப்பு இந்த வாரம்
மின்னஞ்சல்

தமிழகத்தின் டாப் 50 MLAக்கள் யார்?யார்?


அண்மையில்ஜெயலலிதா தலைமையில் அமைந்த அரசு, இரண்டாண்டுகளை நிறைவு செய்தது. அரசு மட்டுமல்ல, 2011-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காவது தமிழக சட்டமன்றமும் இரண்டாண்டுகளை நிறைவு செய்துள்ளது.


தாங்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களின் கடந்த இரண்டாண்டுகால செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்கள் எத்தனை மதிப்பெண்கள் அளிப்பார்கள் என்பனவற்றை அறிந்துகொள்ள, ‘புதிய தலைமுறை’ விரும்பியது.


அதற்காக, கருத்துக் கணிப்புக்கள் நடத்துவதில் தொழில்முறை தேர்ச்சி கொண்டவர்களான ARG நிறுவனத்தின் (காண்க: பெட்டிச் செய்தி பக்கம்:19) மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும்,ஏப்ரல் 12-லிருந்து 30 வரை கருத்தாய்வு நடத்தப்பட்டது. 234 தொகுதிகளில் உள்ள 936 இடங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள், பெரிய கிராமங்கள், குக்கிராமங்கள் எனப் பல இடங்களில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வியாபாரிகள், அரசு துறை, தனியார் துறை ஊழியர்கள், இல்லத்தரசிகள் போன்ற அனைத்துத் தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒரு தொழில்முறை ஆய்வு நிறுவனத்தின் மூலம் 234 தொகுதிகளிலும் ஊடகம் ஒன்றினால் இது போன்ற ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறை.


ஆய்வாளர்கள் பேட்டி கண்ட மக்களிடம் 4 கேள்விகளை முன் வைத்தார்கள்.


1.    தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை உங்கள் –MLA நிறைவேற்றுகிறாரா?

2.    உங்கள் தொகுதியைப் பார்வையிட, MLA எத்தனைமுறை வந்துள்ளார்?

3.    உங்களால், – MLAவை எளிதாக சந்திக்க முடிகிறதா?

4.    உங்கள் – MLAவின் செயல்பாட்டில் நிறைகள் அதிகமா? குறைகள் அதிகமா?

5.    உங்கள் அபிப்பிராயத்தில் – MLAவிற்கு என்ன மதிப்பெண் கொடுப்பீர்கள்?



இந்தக் கேள்விகளுக்கு மக்கள் அளித்த விடைகள், செயல்பாடுகளுக்கு  (1 முதல் 4 வரை உள்ள கேள்விகள் நான்கிற்கும் சேர்த்து) மொத்தம் 60 மதிப்பெண்களும், ஐந்தாவது கேள்வியான மக்கள் அளிக்கும் மதிப்பெண்கள் 40-க்கும் என அளவிடப்பட்டு மொத்தம் 100 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டன. மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு வரிசைப் பட்டியல் ஒன்றும் (ரேங்க்) தயாரிக்கப்பட்டது.

அடுத்து வரும் பக்கங்களில் தமிழகத்தின் டாப் 50 MLAக்கள் யார்? யார்? உங்கள் தொகுதி MLA, அந்தப் பட்டியலில் இருக்கிறாரா என்பதை நீங்களே கண்டுகொள்ளலாம்.

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் ஆகியோரது தொகுதிகளிலும் கருத்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால், அரசு மற்றும் கட்சிப் பணிகளையும் ஆற்றும் கூடுதல் பொறுப்பையும் அவர்கள் சுமப்பதைக் கருதி, மதிப்பீடு பட்டியல் வரிசையில் (ரேங்க் பட்டியலில்) அவர்களை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதே சமயம், மக்கள் அவர்களுக்கு அளித்துள்ள மதிப்பெண்கள் (நூற்றுக்கு) விவரம் தனியே இடம் பெறுகிறது.

இது அரசு செயல்பாடு மற்றும் கொள்கை பற்றிய மதீப்பீடோ அல்ல, தனிப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் அவரது கட்சியைப் பற்றிய மதிப்பீடு அல்ல, எம்.எல்.ஏ.வின்  performance  பற்றியது.

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மக்கள் எண்ணத்தை அறிவதைவிட, ஒவ்வொரு ஆண்டும் அறிந்து அதன்படி எம்.எல்.ஏ.க்கள் திறம்பட செயல்பட இந்தக் கருத்துக்கணிப்பு உதவும்.

இந்த ஆய்வு மூலம் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. குடிதண்ணீர், தடையற்ற கழிவுநீர்க் கால்வாய்கள், குப்பைகளற்ற சுற்றுப்புறம், சாலை வசதிகள், போக்குவரத்து போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் செய்துதர வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அரசியல் பணிகளைவிட, குடிமைப் பணிகளில் எம்.எல்.ஏ.க்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதேபோல தொகுதிக்கு அடிக்கடி வர வேண்டும். வரும்போது, மக்களை (அரசியல்வாதிகளை மட்டுமல்ல) சந்திக்க வேண்டும் என்பதும் அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பணிச்சுமை காரணமாக தொகுதிக்கு வர இயலாதவர்கள் முழுநேர ஊழியர்களை நியமித்து, மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். குறிப்பாக மனுக்களைப் பெறுவது, அளித்த மனுக்களுக்கு உரிய பதில் அளிப்பது (அது நிராகரிக்கப்பட்டாலும்) என விரும்புகிறார்கள்.


சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி மேம்பாட்டு நிதி எதற்காக, எப்படிச் செலவிடப்படுகிறது என்பது தெளிவாக, வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு. இப்போது எந்தத் திட்டம் அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது, எந்தத் திட்டத்திற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செலவிடப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிவதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.

சில சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், அவை மக்களின் கவனத்தைப் பெறவில்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ள ஓர் அம்சம். அதன் காரணமாக மக்கள் அவர்களுக்கு அளித்துள்ள மதிப்பெண்களில் சரிவு ஏற்பட்டு, அது மொத்த மதிப்பெண்களிலும் பிரதிபலிக்கிறது.

இனி உள்ள மூன்றாண்டுகளில் மக்களின் மதிப்பைப் பெற்றவர்களாக, மக்களுக்கு நெருக்கமானவர்களாக (People Friendly) எப்படிச் செயல்பட வேண்டும் என்று பாதை வகுத்துக்கொள்ள நம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.


அதன் மூலம் நம் மக்களின் வாழ்வும். நம் ஜனநாயகமும் மேம்படும் என்பதும் எங்கள் நம்பிக்கை.

 

ரேங்க் - 1

கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.) 

கோபிச்செட்டிபாளையம்                                                                                                                                                     

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘உதவி கேட்டால்  உடனே நிறைவேற்றப்படும்’

 

ரேங்க் - 2

எஸ்.தாமோதரன் (அ.தி.மு.க.)

கிணத்துக்கடவு                                                                                              

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘மூன்று மாதத்திற்கு ஒருமுறை வருவார்'


ரேங்க் - 3

ஆர்.சின்னசாமி (அ.தி.மு.க.)

சிங்காநல்லூர்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘நன்றாக பார்த்துக் கொள்கிறார்’


ரேங்க் - 4

எம்.ரத்தினசாமி (அ.தி.மு.க.)

திருவையாறு


 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்’


ரேங்க் - 5

பி.தங்கமணி (அ.தி.மு.க.)

குமாரபாளையம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘சொன்னதைச் செய்வார்’


ரேங்க் - 6

ஆர்.துரைக்கண்ணு (அ.தி.மு.க.)

பாபநாசம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘இவரை எளிதில் அணுகலாம்’


ரேங்க் - 7

ஆர்.வைத்தியலிங்கம் (அ.தி.மு.க.)

ஒரத்தநாடு

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘எளிதாக அவரை சந்திக்க முடியும்’


ரேங்க் - 8

ஆர்.விஸ்வநாதன் (அ.தி.மு.க.)

நத்தம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘குடிநீர் பிரச்சினை மட்டும்தான் மற்றபடி நன்றாக செய்கிறார்'


ரேங்க் - 9

டாக்டர். புஷ்ப லீலா ஆல்பம் (தி.மு.க.)
பத்மநாபபுரம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘சரியான முறையில பணிகளைச் செய்கிறார்’


ரேங்க் - 10

கே.பி.பி.பாஸ்கர் (அ.தி.மு.க.)
நாமக்கல்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

‘குறை ஏதும் இல்லை. உழைக்கிறார்"


ரேங்க் - 11

எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.)

தொண்டாமுத்தூர்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

ஆறு மாதத்திற்கு ஒருமுறை வருவார்"


ரேங்க் - 12

என்.வி.காமராஜ் (அ.தி.மு.க.)
வேதாரண்யம்


 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்"


ரேங்க் - 13

ஆர்.காமராஜ் (அ.தி.மு.க.)

நன்னிலம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து
நல்லவர், ஆனால், எதுவும் செய்யவில்லை"


ரேங்க் - 14

வி.சி.ஆறுகுட்டி (அ.தி.மு.க.)

கவுண்டம்பாளையம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

எம்.எல்.ஏ.வை சந்திப்பது எளிது"


ரேங்க் - 15

கே.உலகநாதன் (சி.பி.ஐ.)

திருத்துறைப்பூண்டி

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

மக்களுக்காக உழைக்கக்கூடியவர்"


ரேங்க் - 16

சித.சோழன் பழனிச்சாமி (அ.தி.மு.க.)

காரைக்குடி

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தொகுதிக்கு வருவது மிகவும் குறைவு"


ரேங்க் - 17

கே.சி. வீரமணி (அ.தி.மு.க.)

ஜோலார்பேட்டை

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

மரியாதைக்குரியவர்"


ரேங்க் - 18

எம்.சி.சம்பத் (அ.தி.மு.க.)

கடலூர்

 

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தானே புயல் வீடு ஒதுக்கவில்லை"


ரேங்க் - 19

எஸ்.குணசேகரன் (சி.பி.ஐ.)

சிவகங்கை


 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

நன்றாக செயல்படுகிறார்"


ரேங்க் - 20

கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க.)

பாலக்கோடு

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

திருமண மண்டபம் கட்டியிருக்கிறார்"


ரேங்க் - 21

டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.)

மன்னார்குடி

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

நல்லவர்"


ரேங்க் - 22

கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.)

கிருஷ்ணகிரி


 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை"


ரேங்க் - 23

பி.எல்.சுந்தரம் (சி.பி.ஐ.)

பவானிசாகர் (தனி)

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

ஏதோ செய்கிறார்"


ரேங்க் - 24

எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அ.தி.மு.க.)

திருப்பூர் (வடக்கு)

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

நல்ல மனிதர்"


ரேங்க் - 25

எஸ்.ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்)

கிள்ளியூர்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தண்ணீர்ப் பிரச்சினை அதிகமாக உள்ளது"


ரேங்க் - 26

என்.ஆர்.ரெங்கராஜன் (காங்கிரஸ்)

பட்டுக்கோட்டை


 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தொகுதியை ஓரளவு பார்வையிடுகிறார்"


ரேங்க் - 27

டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.)

ராயபுரம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

குறைகளைச் சொன்னால் உடனே நிவர்த்தி செய்வார்"


ரேங்க் - 28

டி.மலரவன் (அ.தி.மு.க.)

கோவை (வடக்கு)

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன"


ரேங்க் - 29

டாக்டர். எஸ்.துரையப்பா (அ.தி.மு.க.)

வாசுதேவநல்லூர் (தனி)

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

இதுவரை 3 முறை மட்டுமே வந்திருக்கிறார்"


ரேங்க் - 30

சி.கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
ஓமலூர்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

சொல்வதைச் செய்வார்"


ரேங்க் - 31

கே.ஆர்.பெரியகருப்பன் (தி.மு.க.)

திருப்பத்தூர்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

 

ரேங்க் - 32

கே.ராஜூ (அ.தி.மு.க.)

மதுரை (மேற்கு)

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

அடிக்கடி தொகுதிக்கு வருகிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்"


ரேங்க் - 33

ஆர்.எம்.பாபுமுருகவேல் (தே.மு.தி.க.)

ஆரணி

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

நன்கு படித்தவர்"


ரேங்க் - 34

வி.முத்துக்குமார் (தே.மு.தி.க.)

விருத்தாச்சலம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

ஓரளவு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்"


ரேங்க் - 35

கோவி.செழியன் (தி.மு.க.)

திருவிடைமருதூர் (தனி)

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தண்ணீர்ப் பிரச்சினையும் சாலைப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை"


ரேங்க் - 36

ஆர்.சாமி (அ.தி.மு.க.)

மேலூர்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

ஒருசில வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்"


ரேங்க் - 37

எஸ்.விஜயதாரணி (காங்கிரஸ்)

விளவங்கோடு

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

எளிமையானவர்"


ரேங்க் - 38

கே.கோபால்சாமி (அ.தி.மு.க.)

ராஜபாளையம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

கோயில் கட்டித் தரப்பட்டது"


ரேங்க் - 39

ஆர்.மணிமாறன் (அ.தி.மு.க.)

பூந்தமல்லி (தனி)

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

பூங்கா இல்லை. கடும் போக்குவரத்து நெரிசல். சுகாதாரமே இல்லாத பேருந்து நிலையம்"


ரேங்க் - 40

ஏ.சௌந்தரபாண்டியன் (தி.மு.க.)

லால்குடி

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தேர்தலுக்குப் பிறகு தொகுதிக்கு வரவில்லை. வாக்குறுதியை பற்றிக் கேட்டால் கிண்டல் செய்கிறார்"


ரேங்க் - 41

ஆர்.சீனிவாசன் (அ.தி.மு.க.)

ஆற்காடு

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தேர்தலின்போது வந்தார்"


ரேங்க் - 42

ஜி.அன்பழகன் (தி.மு.க.)

கும்பகோணம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

ஏழைகளால் அவரை எளிதில் அணுக முடியாது"


ரேங்க் - 43

கே.பி.பரமசிவம் (அ.தி.மு.க.)

பல்லடம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை. தொகுதிக்கு வருவதில்லை"


ரேங்க் - 44

கே.கோபிநாத் (காங்கிரஸ்)

ஓசூர்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தொகுதி மக்களை எம்.எல்.ஏ. மறந்துவிட்டார்"


ரேங்க் - 45

ஆர்.மனோகரன் (அ.தி.மு.க.)

திருச்சி (கிழக்கு)

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

அவர் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் இல்லை"


ரேங்க் - 46

கே.பழனிச்சாமி (அ.தி.மு.க.)

எடப்பாடி

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

எடப்பாடியில் பிரச்சினை என்றால் உடனே வந்து பார்வையிடுவார். மற்ற பகுதிகளுக்கு ஏதாவது விழா என்றால் மட்டும்தான் வருவார்"


ரேங்க் - 47

எம்.முத்துராமலிங்கம் (அ.தி.மு.க.)

திருமங்கலம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை"


ரேங்க் - 48

டி.பி.பூனாட்சி (அ.தி.மு.க.)

மண்ணச்சநல்லூர்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

தொகுதி முன்னேற்றம் இல்லை"


ரேங்க் - 49

எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் (அ.தி.மு.க.)

நெய்வேலி

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

அரசின் விலையில்லா பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை"


ரேங்க் - 50

என்.எஸ்.என். நடராஜ் (அ.தி.மு.க.)

காங்கேயம்

 

 

 

 

 

 

 

மக்கள் கருத்து

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார். தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளது"

 


இந்த கருத்துக் கணிப்பை நடத்தியவர்கள் யார்?


‘புதிய தலைமுறை’க்காக இந்தக் கருத்தாய்வை நடத்தியவர்கள், மார்க்கெட் ரிசர்ச், தேர்தல் கருத்துக் கணிப்பு இவற்றை நடத்துவதில் நீண்ட அனுபவம் வாந்த ARG என்றழைக்கப்படும் Apt Research Group. கடந்த காலங்களில் தேர்தல் முடிவுகளை மிகத் துல்லியமாகக் கணித்த பெருமை இவர்களுக்கு உண்டு. 1989-ஆம் ஆண்டு ‘தி ஹிந்து’ நாளிதழுக்காக இவர்கள் நடத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்பில், திமுக அணி 171 இடங்களில் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். அந்தத் தேர்தலில் திமுக அணி 170 இடங்களைப் பெற்றது. அதேபோல 1996 தேர்தலின் போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக -தமாகா அணி 220 இடங்களைப் பெறும் என்று தெரிவித்திருந்தார்கள். அந்தத் தேர்தலில் அந்த அணி 220 இடங்களில் வென்றது. 2001-இல் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், ‘டெக்கான் ஹெரால்ட்’ நாளிதழுக்காக நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக கணிசமான இடங்களைப் பெறும் என்றும் இவர்கள் தெரிவித்த கணிப்புகள் பொய்க்கவில்லை.

‘தி ஹிந்து’, ‘டெக்கான் ஹெரால்ட்’, ‘ஃப்ரண்ட்லைன்’, ‘சண்டே மெயில்’, ‘பிரஸ் டிரஸ்ட்  ஆஃப் இந்தியா’ ஆகிய ஊடகங்களுக்கும், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி போன்றவற்றிற்கும் மட்டுமன்றி, The Swedish International Development Agency  போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் கருத்தாய்வுகள் நடத்திய நிறுவனம் ARG.

 

 

Comments 

 
0 #8 Soorya Kumar 2013-06-12 16:21
வருடா Varudam இந்த Aiuvu முடிவு thevai. நன்றி புதிய thalaimurai
 
 
0 #7 muthuramalingam g 2013-06-12 11:47
இவர்கள் அனைவரும் டாப் 50 யா ... இவர்களே
இப்படினா மீதம் 184 பேர் எப்புடி ....
இனிமேலாவது மக்களுகாக வேலை செய்யுங்க தலைவர்களே !!!!!
புதியதலைமுறைக்க ு எனது நன்றிகள்
 
 
+3 #6 velmurugan 2013-06-08 15:08
நன்றி புதிய தலைமுறை டெலிவிஷன் எந்த எந்த mla என்ன எடமுன்னு சொன்னதுக்கு நன்றி...........
 
 
+1 #5 sobi tha selvan 2013-06-06 00:45
புதியதலைமுறைக்க ு என் வாழ்த்துக்கள்
 
 
+1 #4 sobi tha selvan 2013-06-06 00:42
மக்களுக்கு சேவை செய்ய ஒரு அர்த்தமுள்ள புதிய தலைமுறை வாழ்க
 
 
+1 #3 A.KUMAR 2013-06-05 18:33
மாதம் மாதம் இது போன்ற சர்வே தேவை
 
 
+8 #2 GURUSAMY 2013-06-04 13:30
நல்லா புரியட்டும் என் தொகுதி எம் . எல். எ . க்கு இப்பவாவது. நம்ம என்ன வேலை செஞ்சோம். நம்ம நிலை என்னன்னு. என் தொகுதி எம்.எல்.எ. தொகுதிக்கே வருவதில்லை. என் தொகுதியில் இதுவரை இப்படியோருவரை நாங்கள் பார்த்ததே இல்லை. படு மோசம் . அனால் பரம்பரைக்கே சொத்து சேர்த்துக்கொண்ட ார்.
 
 
+11 #1 sivaram 2013-06-03 08:28
குட் சர்வே. புதியதலைமுறை தேவை இந்த புதிய தலைமுறைக்கு
 
 
இந்த வார இதழில்
உள்ளத்தில் ஒளி இருந்தால்...
தலையங்கம்
என் ஜன்னலுக்கு வெளியே...மழைக்காலக் குயில்
அரை நூற்றாண்டுக் கனவு பலித்தது
தமிழகத்தில் ஓர் ஆச்சரிய கிராமம் : ‘‘ஜாதியை தூக்கிப்போடு! சம்மதமா? மூணுமுடிச்சு போடு!’’
காலிப்பணியிடங்கள் 50 ஆயிரம் கவலையில் இந்திய ராணுவம்
பழைய ஃபேன், போன், கம்ப்யூட்டர் இருக்கா ?
தமிழக - கேரள எல்லை
தமிழக - ஆந்திர எல்லை
தமிழக - கர்நாடக எல்லை
தமிழக - புதுச்சேரி எல்லை
மனக்குகைச் சித்திரங்கள் - 10
போகாத ஊர் : மன்னர் மண்டியிட்ட கடற்கரை
பசுமைப் பக்கங்கள் - 1 / வாங்க, பணத்தோட்டம் போடலாம்!
பசுமைப் பக்கங்கள் - 2 / வறட்சியிலும் பயிருக்கு உயிர் தரும் பாக்டீரியா
வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி
புலிகளின் புதல்வர்கள் – 37
எம்ப்ளாய்மெண்ட்
பாதங்களைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜன்
இன்பாக்ஸ்
வாவ்..!
அப்பாடா..!
அடக் கொடுமையே!
செல்கிறோம் செவ்வாய்க்கு!
சென்ற வார செய்தி நாயகர்கள்!
 
இந்த வார கல்வி இதழில்
என்ஜினீயரிங் கவுன்சலிங்: கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி?
விண்ணைத் தொட்ட சென்னை மாணவர்கள்!
எப்படியிருக்கிறது பிளஸ் - 1, பிளஸ் - 2 வரைவு பாடத் திட்டம்?
ஆசிரியர் தகுதித் தேர்வு வென்றவர் வழிகாட்டுகிறார்!
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்
‘மருத்துவம், பொறியியலில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்!’
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் பணி இடங்கள்!
தொடக்கக் கல்வி டிப்ளமோ!
அஞ்சல்