முகப்பு இந்த வாரம்
மின்னஞ்சல்

உடல் அசைந்தால் இசை பிறக்கும்..பூ

என். ஹரிபிரசாத்


யின்டோவென் டிசைன் அகாதெமியில் தனது பட்டப்படிப்பிற்கான ஆய்வறிக்கையை தயாரிப்பு செய்யும்போது, ஜானுக்கு இந்தப் புதிய கருவி பற்றிய சிந்தனை தோன்றியுள்ளது. அதாவது ஒரு மனிதன் இசையை மீட்ட வேண்டுமெனில், ஏதேனும் ஓர் இசைக்கருவியின் தன்மைக்கேற்ப உடலினை அசைத்துப் பழக்கம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நல்ல திருத்தமான இசையை வெளிப்படுத்த முடியும். இந்த முறைக்கு மாற்று வழிமுறையைக் கண்டுபிடிக்க எண்ணிய ஜான், இந்தச் சிறிய மின்னணுக் கருவியை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் இசைக்கு ஏற்ப உடலினை பழக்கப்படுத்த வேண்டியது இல்லை. புல்லாங்குழல் வாசிப்பவர், தனது விரல்களை பழக்கப்படுத்த வேண்டும். டிரம் செட் வாசிப்பவர், கைகளுக்கு முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.


ஆனால், இந்த மின்னணு இசைக்கருவியை உடலில் அணிந்து இசைப்பதற்கு கலையுணர்வுடன் இயற்கையான உடல் அசைகளை மேற்கொண்டாலே போதும். வெவ்வேறு விதமான இசைப் பரிமாணங்களை இந்தக் கருவி மூலம் உருவாக்க முடியும். இதற்கென தனியாகப் பயிற்சி ஏதும் செய்ய வேண்டியதில்லை.


இந்தச் சிறிய மின்னணுக் கருவியை அணிந்து  கொள்பவர்கள், தமது விரலை சிறிது லேசாக அசைப்பது அல்லது பாதங்களை தரையில் தட்டுவதன் மூலம் இசைக்கருவிகளின் சப்தங்களை அழகாக வெளிக்கொண்டுவர முடியும். மனித உடலின் அசைவுகளைக் கொண்டு இயற்கையாக உருவாகும் இந்த இசையை சப்த உள்ளுணர்வு (Sound on Intuition) என்று அழைக்கின்றனர்.


விரல்களின் அசைவினை சென்சார் மூலம் உணர்ந்து, அதற்கேற்ப இந்தக் கருவி இசையை வெளிப்படுத்தும். இதே போல் கை விரல்களில் அணியும்போது, விரல்களை மடிக்கின்றபோது வெவ்வெறு வகையான சப்தங்களை வெளிப்படுத்தும். இதே போன்று கால்விரல்களில் இந்தக் கருவி மாட்டப்படும்போதும் இயங்கும்.


மேலும் நெஞ்சினில் அணிந்து கொள்ளக்கூடிய சென்சார் ஒன்று இதயத்துடிப்பை உணர்ந்து, டிரம்மின் ஓசையை இந்தக் கருவி வெளிப்படுத்தும். இந்த மின்னணு இசைக் கருவிகள் அனைத்தும் – MIDI (Musical Interface Digital Interface) தொழில்நுட்ப தரநிலை கொண்டு இயக்கப்படுகின்றன.


மேலும் பதியப்பட்ட அசைவுகளை லேப்டாப் அல்லது கணினியுடன் இணைத்தால், வெவ்வேறு புதிய இசை வடிவங்களைப் பெறமுடியும். புதிய பரிணாமமாக வளர்ந்துவரும் இந்த மின்னணுக் கருவி, மிக விரைவில் அனைத்து உடலிலும் இசையை உருவாக்கும் .

 
 
இந்த வார இதழில்
ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?
தலையங்கம்
என் ஜன்னலுக்கு வெளியே...மாறாத அடையாளம்...
உயிர் காக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை இனி ஏழைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கும்
உங்கள் முகத்தோடு ஓர் அஞ்சல்தலை!
வருகிறது பிளாஸ்டிக் சாலைகள். ஆனால் . . .
பூகம்பத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள எறும்புகளால் முடியும்!
நியாயம் கிடைக்குமா?
வீடு கட்ட பிளான் இலவசம்
ஏழே ரூபாய்க்கு 20 லிட்டர் மினரல் வாட்டர்!
இனி நீர் நிம்மதியாக இருக்கலாம்!
மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள்
மனக்குகைச் சித்திரங்கள் - 6
நீங்களும்ஜெயிக்கலாம் - 18
வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி
புலிகளின் புதல்வர்கள் – 33
பசுமைப் பக்கங்கள்-1 / சமவெளியிலும் விளையும் கேரட்
பசுமைப் பக்கங்கள் - 2 / தர்பூசணி அளவுக்கு லாபம்
எம்ப்ளாய்மெண்ட்
இன்பாக்ஸ்
மிஸ்டர். அற்புதம்!
உடல் அசைந்தால் இசை பிறக்கும்..பூ
சென்ற வார மனிதர்கள்
 
இந்த வார கல்வி இதழில்
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை!
பிஎஸ்சி மாணவர்கள் எம்இ படிக்கலாம்!
பிளஸ் டூவுக்குப் பின் விவசாயப் படிப்புகள்
பம்மலில் இருந்து பாஸ்டன் வரை!
செய்திகள்
க்விஸ்
பட்டதாரி மாணவர்களுக்கு வங்கி அதிகாரி வேலை!
அப்ளிக்கேஷன் போட்டாச்சா?
மாணவர்களுக்கு உதவும் கல்வித் தளம்!
நேஷனல் லா ஸ்கூல்; தொலைநிலைக் கல்வி படிப்புகள்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள்
கல்விக் கண் தரும் மாணவர்கள்!
BSNL நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை!
அக்கம் பக்கம்
அஞ்சல்