முகப்பு இந்த வாரம்
மின்னஞ்சல்

உயிர் காக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை இனி ஏழைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கும்

கீதா


ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்தி, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது ரத்த வங்கியான ஜீவன் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு 9 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.


ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?


தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி வாய்ந்த மெசன்கைமல் (mesenchymal) எனப்படும் செல்கள் உள்ளன. இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள். இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடல் உருவாகியுள்ளது. உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உருவாக அடிப்படையானது இந்த மூல செல்கள். தொப்புள் கொடி ரத்த திசுக்களில் உள்ள சக்தி வாய்ந்த செல்களைப் பாதுகாத்து வைத்தால், பின்னாளில், உறுப்புகள் நோய்வாய்ப்படும்போது  இவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.


இந்தியா முழுவதும் 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் உள்ளார்கள் (ஆண்டுதோறும் புதிதாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்). ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பால் ஏற்படுவது தலஸ்சீமியா. இந்த 2 பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே.


ஆனால், தற்போது ஸ்டெம் செல்லை இறக்குமதி செய்து, சிகிச்சை செய்துகொள்ள 25 லட்ச ரூபாய் ஆகிறது. இதனால், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்த ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு ஒரு முற்போக்கான நடவடிக்கையை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வரும் ரத்த வங்கியான ஜீவன் வங்கிக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.


ஒரு தொப்புள் கொடியைப் பெற்று, அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து 24 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்போதைக்கு எங்களிடம் 750 ஸ்டெம் செல்கள்தான் பாதுகாக்க பொருளாதார வசதி உள்ளது. தமிழக அரசின் இந்த நிதி உதவியினால் 2014 ஜூன் மாதத்திற்குள் 7,500 ஸ்டெம் செல்கள் சேமிக்க திட்டமிட்டு உள்ளோம். சேமிக்கப்படும் ஸ்டெம் செல்லில் 75 சதவிகிதத்தை அரசு பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு, ஜீவன் ரத்த வங்கி அளிக்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் மற்றும் தலஸ்சீமியா நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்கள் இலவசமாக வழங்கப்படும். மீதி  25 சதவிகிதம் நோயாளியின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப 5 முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு,  50 ஆயிரம் ரூபாய் என்கிற கட்டண அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம், ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்" என்கிறார் இதுகுறித்து, ‘புதிய தலைமுறை’யிடம் பேசிய ஜீவன் ரத்த வங்கியின் தலைவர் டாக்டர் பி.சீனிவாசன்.


ஸ்டெம் செல் கிசிச்சை இலவசமாக மக்களுக்குக் கிடைக்க, ஒரு மாநில அரசு நிதியுதவி செய்வது இந்தியாவில் இதுதான் முதல்முறை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள், இதுபோல நிதியுதவி செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல்.


ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான  குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தொப்புள் கொடியை எங்களிடம் கொடுத்தால், இன்னொரு உயிரைக் காப்பாற்ற அதிலுள்ள ஸ்டெம் செல்கள் பயன்படலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்ப்பம் தரித்த 28-ஆவது வாரத்தில் எங்களை தொடர்புகொண்டு பதிவு செய்தால் போதும். மற்ற நடைமுறைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்கிறார், டாக்டர். சீனிவாசன்.


விவரங்களுக்கு : 044 - 28351200, 044 - 28150300 அல்லது www.bethecurte.in / srinivasanjeevan.org.




 

 
 
இந்த வார இதழில்
ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?
தலையங்கம்
என் ஜன்னலுக்கு வெளியே...மாறாத அடையாளம்...
உயிர் காக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை இனி ஏழைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கும்
உங்கள் முகத்தோடு ஓர் அஞ்சல்தலை!
வருகிறது பிளாஸ்டிக் சாலைகள். ஆனால் . . .
பூகம்பத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள எறும்புகளால் முடியும்!
நியாயம் கிடைக்குமா?
வீடு கட்ட பிளான் இலவசம்
ஏழே ரூபாய்க்கு 20 லிட்டர் மினரல் வாட்டர்!
இனி நீர் நிம்மதியாக இருக்கலாம்!
மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள்
மனக்குகைச் சித்திரங்கள் - 6
நீங்களும்ஜெயிக்கலாம் - 18
வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி
புலிகளின் புதல்வர்கள் – 33
பசுமைப் பக்கங்கள்-1 / சமவெளியிலும் விளையும் கேரட்
பசுமைப் பக்கங்கள் - 2 / தர்பூசணி அளவுக்கு லாபம்
எம்ப்ளாய்மெண்ட்
இன்பாக்ஸ்
மிஸ்டர். அற்புதம்!
உடல் அசைந்தால் இசை பிறக்கும்..பூ
சென்ற வார மனிதர்கள்
 
இந்த வார கல்வி இதழில்
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை!
பிஎஸ்சி மாணவர்கள் எம்இ படிக்கலாம்!
பிளஸ் டூவுக்குப் பின் விவசாயப் படிப்புகள்
பம்மலில் இருந்து பாஸ்டன் வரை!
செய்திகள்
க்விஸ்
பட்டதாரி மாணவர்களுக்கு வங்கி அதிகாரி வேலை!
அப்ளிக்கேஷன் போட்டாச்சா?
மாணவர்களுக்கு உதவும் கல்வித் தளம்!
நேஷனல் லா ஸ்கூல்; தொலைநிலைக் கல்வி படிப்புகள்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள்
கல்விக் கண் தரும் மாணவர்கள்!
BSNL நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை!
அக்கம் பக்கம்
அஞ்சல்