|
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள்
மீனா
தமிழகத்தின் பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைக்கால வரலாறு மற்றும் தொல்லியல், அரபு, அப்ளைடு சம்ஸ்கிருதம், பரதநாட்டியம், கிறிஸ்டியன் ஸ்கிரிப்ச்சர்ஸ், திவ்யப் பிரபந்தம், பாதுகாப்பு மற்றும் உத்திகள், எக்கனாமெட்ரிக்ஸ், ஃபிரெஞ்ச், ஃபைனான்ஷியல் எகனாமிக்ஸ், நாட்டுப்புறப் பாடல்கள், மனித வள நிர்வாகம், ஹிந்தி, ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ், இந்தியப் பொருளாதாரம், இந்திய இசை, இந்தியத் தத்துவம், இஸ்லாமிக் ஸ்டடீஸ், கன்னடம், மலையாளம், பொது நிர்வாகவியல் (தமிழ் மற்றும் ஆங்கில மீடியம்), அரசியல் அறிவியல், சைவசித்தாந்தம், சமூகவியல், தெலுங்கு, உருது பாடப் பிரிவுகளில் எம்.ஏ. படிப்புகள் உள்ளன.
போஸ்ட் மாடர்ன் டெவலப்மெண்ட் அட்மினிஸ்ட்ரேஷனில் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்பும் உள்ளது. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். பயோ பிஸிக்ஸ், லைஃப்ரரி அண்ட் இன்ஃபர்மேஷன் சயின்ஸ், போட்டோனிக்ஸ் அண்ட் பயோ போட்டோனிக்ஸ், யோகா போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி. படிப்புகள் உள்ளன.
கிரிமினாலஜி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஆங்கிலம், இதழியல் மற்றும் தகவல் தொடர்பு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரம் போன்ற பிரிவுகளில் எம்.ஏ. படிக்கவும், இன்டர்நேஷனல் பிஸினஸ் அண்ட் ஃபைனான்ஸ் பிரிவில் எம்.காம். படிக்கவும், கல்வியில் எம்.எட். படிக்கவும் விண்ணப்பிக்கலாம். அட்வான்ஸ்டு பயாலஜி, அப்ளைடு ஜியோலஜி, அனாடமி (மூன்று ஆண்டுகள்), அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியோகிராபி, அப்ளைடு பிளான்ட் சயின்ஸ், பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பயோ மெடிக்கல் ஜெனடிக்ஸ், பயோ டெக்னாலஜி, சைபர் ஃபோரன்சிக் அண்ட் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, நேனோ சயின்ஸ் அண்ட் நேனோ டெக்னாலஜி, பாலிமர் கெமிஸ்ட்ரி, புள்ளியியல், மெடிக்கல் மைக்ரோ பயாலஜி (3 ஆண்டுகள்), ஹியூமன் ரிசர்ச் டெவலப்மெண்ட் சைக்காலஜி போன்ற பிரிவுகளில் எம்.எஸ்.சி. படிக்கவும் விண்ணப்பிக்கலாம்.
அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி, அப்ளைடு எகனாமிக்ஸ், அப்ளைடு ஜியோலஜி, பயோ கெமிஸ்ட்ரி, தாவரவியல், கிறிஸ்டியன் ஸ்டடீஸ், காமர்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், கல்வி, என்டோகிரினாலஜி, ஆங்கிலம், ஹிந்தி, மனிதவள நிர்வாகம், இஸ்லாமிக் ஸ்டடீஸ், போன்ற பல்வேறு பிரிவுகளில் எம்.பில். படிக்க விண்ணப்பிக்கலாம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தகவல் மையத்தில் ரொக்கம் ரூ.300 செலுத்தி விண்ணப்பப் படிவங்களும், தகவல் அறிக்கையும் பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தபால் மூலம் பெற விரும்புவோர், The Registrar, University of Madras, Chennai -5 என்ற பெயரில் ரூ.350-க்கான டி.டி. எடுத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
முதுநிலை மற்றும் எம்.பில். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2013
முதுநிலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2013
விவரங்களுக்கு: www.unom.ac.in
|