முகப்பு இந்த வாரம்
மின்னஞ்சல்

வானில் பறக்கிறேன்!


மருத்துவப் படிப்புக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தவேண்டிய இக்காலத்தில், ராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ். படிக்கலாம் என்ற செய்தி, தேனாக இனித்தது. என் மகனை ஒரு மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்பது என் லட்சியம். ஆனால் அதற்கேற்ற பொருளாதார வசதி என்னிடம் இல்லை. ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிக்க என் மகனுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக இருக்கிறது.

- எம்.ஜோதிலிங்கம், விழுப்புரம்.



பிளஸ் டூவுக்குப் பின்னர் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் தயக்கமின்றி தனக்கான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் கலை மற்றும் அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போரின் நிலையோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோன்று உள்ளது. இந்நிலையை மாற்றி என்ன படிப்பு படித்தால், எந்தெந்தத் துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்று அலசிய கட்டுரை நல்லதொரு வழிகாட்டியாய் அமைந்தது. அதிலும், பி.எஸ்சி. புள்ளியியல் படிப்பு மிகுந்த வேலைவாய்ப்பு உள்ள துறை. ஆனால், மாணவர்கள் போதிய அளவில் அந்த துறையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது போன்ற செய்திகள் நான் அறியாதவை. ஆசிரியரான என்னிடம் பல பெற்றோர் தன் பிள்ளையை எந்தப் படிப்பில் சேர்க்கலாம் என்று கேட்கும்போது தடுமாறும் நிலையே இருந்தது. இனி அவர்களுக்கு தன்னம்பிக்கையோடு பதில் கூறுவேன். ‘புதிய தலைமுறை கல்வி’க்கு மனமார்ந்த நன்றி.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.



மீன்பிடி கப்பல்களை இயக்குவதற்கு ஒரு படிப்பு உள்ளதா? ஃப்ஷரி சயின்ஸ் பற்றி படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. பொறியியல், மருத்துவம் என்று எல்லோரும் ஒரே மாதிரியான படிப்புகளைப் படிக்காமல், இதுபோன்ற வித்தியாசமான படிப்பைப் படித்தால், வேலைவாய்ப்பும் எளிதாகும்.

- ஆர்.விஸ்வநாதன், தாராபுரம்.



எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் உதவித்தொகையுடன் வெஸல் நேவிக்கேட்டர், மெரைன் பிட்டர் ஆகிய படிப்புகளை சிப்நெட் கல்வி நிலையத்தில் படிக்கலாம் என்ற செய்தி மிகவும் பயனுள்ளது. தொடர்ந்து மேற்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்கள் இதுபோன்ற தொழிற்கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறலாம்.

- எம்.அம்சவேணி, புதுக்கோட்டை.



பிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகளில் என்னென்ன படிக்கலாம் என்று பட்டியலிட்டிருந்தது பாராட்டுக்குரியது. வித்தியாசமான, விதவிதமான படிப்புகளாக மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படித்தால், வருங்காலம் பிரகாசமாக இருக்கும்.

- ஜெ.பிரியா, சேந்தமங்கலம்.



பைலட் ஆக என்ன செய்யவேண்டும், யாரை அணுகவேண்டும் என்ற தகவல்களை தெளிவாக விளக்கியிருந்தீர்கள். படித்து முடித்தவுடன், மெட்ராஸ் பிளையிங் கிளப்புக்கு போன் போட்டுப் பேசினேன். இப்போதே பைலட் ஆகிவிட்டதுபோல் வானில் பறக்கிறேன்.

-பி.அர்ஜுனன், திருவானைக்காவல்.

 
 
இந்த வார இதழில்
ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?
தலையங்கம்
என் ஜன்னலுக்கு வெளியே...மாறாத அடையாளம்...
உயிர் காக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை இனி ஏழைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கும்
உங்கள் முகத்தோடு ஓர் அஞ்சல்தலை!
வருகிறது பிளாஸ்டிக் சாலைகள். ஆனால் . . .
பூகம்பத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள எறும்புகளால் முடியும்!
நியாயம் கிடைக்குமா?
வீடு கட்ட பிளான் இலவசம்
ஏழே ரூபாய்க்கு 20 லிட்டர் மினரல் வாட்டர்!
இனி நீர் நிம்மதியாக இருக்கலாம்!
மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள்
மனக்குகைச் சித்திரங்கள் - 6
நீங்களும்ஜெயிக்கலாம் - 18
வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி
புலிகளின் புதல்வர்கள் – 33
பசுமைப் பக்கங்கள்-1 / சமவெளியிலும் விளையும் கேரட்
பசுமைப் பக்கங்கள் - 2 / தர்பூசணி அளவுக்கு லாபம்
எம்ப்ளாய்மெண்ட்
இன்பாக்ஸ்
மிஸ்டர். அற்புதம்!
உடல் அசைந்தால் இசை பிறக்கும்..பூ
சென்ற வார மனிதர்கள்
 
இந்த வார கல்வி இதழில்
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை!
பிஎஸ்சி மாணவர்கள் எம்இ படிக்கலாம்!
பிளஸ் டூவுக்குப் பின் விவசாயப் படிப்புகள்
பம்மலில் இருந்து பாஸ்டன் வரை!
செய்திகள்
க்விஸ்
பட்டதாரி மாணவர்களுக்கு வங்கி அதிகாரி வேலை!
அப்ளிக்கேஷன் போட்டாச்சா?
மாணவர்களுக்கு உதவும் கல்வித் தளம்!
நேஷனல் லா ஸ்கூல்; தொலைநிலைக் கல்வி படிப்புகள்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள்
கல்விக் கண் தரும் மாணவர்கள்!
BSNL நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை!
அக்கம் பக்கம்
அஞ்சல்