புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 3 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அதில் 3 பேர் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 மீனவர்களும் இன்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இலங்கை கடற்படையினரால் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 159 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'