[X] Close

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது ஆர்சிபி! கொல்கத்தாவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

Subscribe
RCB-versus-KKR-match-number-ten-IPL-2021-and-Kohli-s-Bangalore-won-by-38-runs-and-it-was-the-third-consecutive-win-for-the-team

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. 


Advertisement

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு நித்திஷ் ராணா மற்றும் சுப்மன் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இரண்டாவது ஓவரில் கில் 9 பந்துகளில் 21 ரன்கள் குவித்து ஜேமிசன் வேகத்தில் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த திரிபாதியும் பவர் பிளே ஓவர்களின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார். அதற்கடுத்த ஓவரில் ராணாவும், ஒன்பதாவது ஓவரில் தினேஷ் கார்த்திக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 

கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனும் 29 ரன்களை குவித்து அவுட்டானார். 

இறுதி ஓவர்களில் ஷகிப் அல் ஹசன் மற்றும் ரசல் களத்தில் இருந்தும் கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. இருபது ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது அந்த அணி. அதன் மூலம் நடப்பு சீசனில் மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா என தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் மூன்று அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது பெங்களூரு அணி. அந்த அணிக்காக ஜேமிசன் 3 விக்கெட்டுகள், சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். 

மும்பையில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close