[X] Close

கள்ளச்சந்தையில் 300 மடங்கு வரை அதிக விலைக்கு விற்கப்படும் ரெம்டெசிவிர்

Subscribe
Remdesivir-sold-up-to-300-times-higher-on-the-black-market

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் 300 மடங்கு வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மாநில அரசுகளும் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கொரோனா பராமரிப்பு மையங்களை உருவாக்கி வருகின்றன. இந்த சூழலில், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

image


Advertisement

இந்தியாவில் 7 நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரிக்கும் நிலையில், 899 ரூபாய் முதல் ஐந்தாயிரத்து 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில மருந்து கடைகள், ரெம்டெசிவரை எட்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடகாவில் சில தனியார் மருத்துவமனைகள், ரெம்டெசிவிர் மருந்தை வெளியே சென்று வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களை வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதிய அளவு மருந்து கையிருப்பில் இருப்பதாகவும், கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். புனேவில் மருந்து தேவைப்படுவோருக்கு டோக்கன் வழங்கப்படுவதாகவும், அதில் வரிசையில் குறுபடிகளை ஏற்படுத்தி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

image


Advertisement

இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதுள்ள 7 ரெம்டெசிவிர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒரு மாத உற்பத்தி திறன் 38.80 லட்சம் குப்பிகளாக உள்ள நிலையில், கூடுதலாக 7 இடங்களில் மாதத்துக்கு 10 லட்சம் குப்பிகளை உற்பத்தி செய்ய 6 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெம்டெசிவிர் தயாரிப்பு திறன் மாதத்துக்கு 78 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கும். மேலும் மருந்தின் விலையை குறைக்கவும் அவர்கள் முன்வந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close