[X] Close

’150 ரன்கள் இலக்கு’ - ஆர்.சி.பி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திய ஐதராபாத் பவுலர்கள்!

Subscribe
SRH-versus-RCB-Match-Number-6-of-the-IPL-2021-Season-and-Hyderabad-bowlers-controlled-Bangalore-Batsmen-and-the-team-needed-150-runs-to-win

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆறாவது லீக் ஆட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். அதன்படி முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. 


Advertisement

அந்த அணிக்காக கேப்டன் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். படிக்கல் 11 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமாரின் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களை குவித்திருந்தது. 

ஏழாவது ஓவரின் முதல் பந்திலேயே 14 ரன்களில் அவுட்டாகி இருந்தார் ஷபாஸ் அகமது. ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் ரஷீத் கான் அற்புதமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். மேக்ஸ்வெல் மற்றும் கோலி நிதானமாக ஆடிய போதும் ஆட்டதின் 13வது ஓவரின் முதல் பந்தில் ஹோல்டரின் வேகத்தில் 33 ரன்களுக்கு அவுட்டானார் கோலி. அது ஆட்டதில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

பெங்களூர் அணியின் நச்சத்திர பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் ரஷீத் கான் சுழலில் சிக்கினார். வாஷிங்டன் சுந்தரும் ரஷீத்திடமே விக்கெட்டை இழந்தார். டேனியல் கிறிஸ்டியனும் ஒரு ரன் எடுத்து நடராஜன் வேகத்தில் வீழ்ந்தார். 


Advertisement

12 ஓவர்களுக்கு 91 ரன்கள் எட்டிய பெங்களூர் அணி அதற்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் ரன் சேர்க்க தடுமாறியது. மேக்ஸ்வெல் மட்டும் இறுதிவரை நிலைத்து நின்று விளையாடி அரை சதம் கடந்து அவுட்டானார். 17வது ஓவரில் கிரீசுக்கு வந்த ஜேமிசன் 8 பந்துகளில் 12 ரன்களை சேர்த்து ஹோல்டர் பந்தில் அவுட்டானார்.  

ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. சென்னை மைதானத்தில் குறைவான ரன்களை கூட சேஸ் செய்வது மிகவும் சவாலாக இருக்கும். மும்பை - கொல்கத்தா போட்டியின் முடிவு கடைசி நேரத்தில் மாறியது. அதேபோல் இந்தப் போட்டியின் வெற்றி தோல்வியும் இறுதியில்தான் தெரியவரும். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close