[X] Close

கொல்கத்தாவிடம் இருந்து வெற்றியை பறித்த மும்பை : ரோகித்தின் வியூகத்தை வியக்கும் ரசிகர்கள்

Subscribe
Fans-Praises-Mumbai-Indians-Skipper-Rohit-Sharma-attacking-field-set-against-KKR-which-helps-the-team-to-snatched-the-victory-from-Kolkata

நடப்பு ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த மும்பை அணியை வெற்றி பெற வைத்த கேப்டன் ரோகித் சர்மாவின் வியூகம் குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 


Advertisement

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஸ்கோரை வேகமாக துரத்திய கொல்கத்தாவின் வெற்றிக்கு ஒரு கட்டத்தில் 26 பந்துகளில் 30 ரன் மட்டுமே தேவைப்பட்டது. கொல்கத்தா எளிதாக வெற்றியை நெருங்கிய நிலையில் ரோகித் சர்மா எதிரணிக்கு நெருக்கடி தரும் வகையில் துல்லியமான ஃபீல்டிங் வியூகத்தை அமைத்தார். அதிரடி வீரர் ரசலுக்கு சில்லி பாயிண்ட், ஸ்லிப்பில் ஃபீல்டர்களை நிற்கவைத்து அவரை ரன் அடிக்கவிடாமல் நெருக்கடிக்குள்ளாக்கினார் ரோகித் சர்மா. இறுதிவரை ரசலால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு மும்பையின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. 

image


Advertisement

இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலைக்கு கொல்கத்தா தள்ளப்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரில் அனுபவ வீரர் ட்ரென்ட் போல்ட்டின் அபாரமான பந்துவீச்சில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கையை விட்டுச் சென்ற போட்டியை மீண்டும் வெற்றியை நோக்கி இழுத்துவந்தார் ரோகித் சர்மா என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close