[X] Close

மும்பையை கட்டுப்படுத்திய ஹர்ஷல் பட்டேல்! பெங்களூரு அணிக்கு 160 ரன் இலக்கு!

Subscribe
Mumbai-Indians-sets--Runs-as-target-to-win-the-first-match-of-the-IPL-2021-Season-to-RCB

முதல் போட்டியில் பெங்களூரு வெற்றி பெற 160 ரன்கள் தேவை! மும்பையை கட்டுப்படுத்திய ஹர்ஷல் பட்டேல்!


Advertisement

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 சீசனின் முதல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்களை 9 விக்கெட் இழப்பிற்கு குவித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மும்பையை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். 

மும்பை அணிக்காக ரோகித் ஷர்மா மற்றும் கிறிஸ் லின் இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என எதிர்பார்த்த சூழலில் ரோகித் ரன் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த சூரியகுமார் யாதவுடன் கூட்டு சேர்ந்து லின் பெங்களூரு பந்துவீச்சை ஒரு கை பார்த்தார். இருவரும் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூரியகுமார் 31 ரன்களிலும், லின் 49 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். இஷான் கிஷன் தன் பங்கிற்கு 28 ரன்களை குவித்தார். ஹர்திக், பொல்லார்ட் மற்றும் குர்ணால் அதிக ரன்களை எடுக்க தவறினர். 


Advertisement

இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களை குவித்தது. பெங்களூரு அணிக்காக ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளும், ஜேமிசன், வாஷிங்டன் சுந்தர், தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இதில் இறுதி ஓவரில் ஹர்ஷல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்தில் குர்ணால் மற்றும் பொல்லார்டை அவர் வீழ்த்தி இருந்தார். இருப்பினும் அந்த ஓவரின் நான்காவது பந்தில் மற்றொரு விக்கெட்டை அவர் கைபற்றினார். தொடர்ந்து பெங்களூரு அணி இலக்கை விரட்டி வருகிறது.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close