[X] Close

சென்னையில் தொடங்கியது ஐபிஎல் 2021- மும்பைக்கு எதிராக பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சு

Subscribe
RCB-won-the-Toss-against-Mumbai-Indians-in-the-first-match-of-the-IPL-2021-season-and-Virat-Kohli-decides-to-bowl-first

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐபிஎல் 2021 - முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் ஃபீல்டிங் தேர்வு!


Advertisement

14வது ஐபிஎல் சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் மும்பை அணி முதலில் பேட் செய்கிறது. 

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் மும்பை அணி களம் இறங்கியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அந்த அணி கோப்பையை குறி வைத்துள்ளது. கோலி தலைமையிலான ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. 


Advertisement


Advertisement

கடந்த 2020 சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி விளையாடிய இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்திருந்தன. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை பீச் ரிப்போர்டும் உறுதி செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close